யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழ் தொடங்குகிறார் நடிகர் சூர்யா. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதிப்புக்குரியவர்களுக்கு, ‘யாதும் ஊரேவின்’ பசுமை வணக்கங்கள்…
மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச் சூழல் குறித்த அக்கறையை, ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்துள்ளது. தன்னெழுச்சியாக ஏராளமான தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள். அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில், அகரம் ஃபவுண்டேசன் உருவாக்கிய ‘யாதும் ஊரே’ திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அமைப்பின் மூலம், சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள அனைவரும் இணைந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவேண்டும். அதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருகின்றன.
ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைக்கவும், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘யாதும்’ எனும் மாத இதழ் ஒன்றை வெளியிட திட்டமிட்டுளோம். கருத்து மாற்றத்தை அனைவரிடமும் விதைப்பதே ‘யாதும்’ மாத இதழின் முதன்மையான நோக்கம். சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நிகழ்வுகள் பற்றியும், நபர்கள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும், தமிழ் மொழியில், முழுமையான சுற்றுச்சூழல் அக்கறையோடு இயங்கும் இதழாக ‘யாதும்’ அமையும்.
‘யாதும்’ இதழின் முதல் பிரதியை, வரும் 28 ஏப்ரல் 2016 அன்று வெளியிடுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத இதழின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் ஏப்ரல் 28 அன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
-http://www.athirvu.com
அது ஒரு சினிமா பத்திரிகை என்றால் குப்பையில் போடச் சொல்லுவேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் சமூக அக்கறைக்காக உங்களை வாழ்த்துகிறேன். “யாதும்” வெற்றி பெற எனது வாழ்த்துகள்! ஒவ்வொரு தமிழனும் – ஏன் சினிமாகத் தமிழனும் கூட – தமிழர்கள் மீது அக்கறைக் கொண்டு செயல்படுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது!
நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள் ,மற்றவை தானாக
நடக்கும் ,சூரியா
தனி தனியே போராடுவதை விட ஒற்றுமையாய் ஒரே தமிழர் கட்சியுடன் சேர்ந்து பாடு பட்டால் விரைவில் தமிழர் எல்லோருக்கும் தமிழ் மண்ணில் வாழ்வு!!!
மிக்க மகிழ்ச்சி, இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள், இயற்கையை அழிக்கவும், மாசுபடுத்தவும் பெரிதும் வழிகோலும் இந்த நவீனச் சூழலில், இதுபோன்ற இயற்கையை பாதுகாக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகள் அனைவருக்கும் மிக மிக அவசியம், இந்த முயற்சி நிச்சயம் உலகளவில் வெற்றி பெற வேண்டும். தொடர்க, வெல்க, மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த பாராட்டுக்கள்…