சென்னை: வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் சிம்பு. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெறுகிறது.
இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. Buy Tickets மறுபுறம் மக்களை 100% வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு வழிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான சிம்பு வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வருகிறார். தற்போது அப்பாடலின் ஒருசில வரிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அவற்றை இங்கே பார்க்கலாம்
ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
இதுகுறித்து சிம்பு ”தந்தை டி.ராஜேந்தர் பாணியில் எதுகை, மோனையுடன் ஒரு பாடாலை எழுதவேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்பாடலின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இன்னும் ஒருசில நாட்களில் இப்பாடல் வெளியாகும்” என கூறியிருக்கிறார்.
அப்பா பேசியே கொள்கிறார் என்றால், மகன் பாடியே கொன்றுவிடுவார் போலிருக்கே…!! என்ன கொடுமை இது ?
அடடா என்ன ஒரு நாட்டுப் பற்று லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு !! சில காலங்களுக்கு முன் ஓர் இசைக் கூட்டுக் களவாணியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய “பீப் சாங்” எனும் இசைக்காவியத்தை தந்த இசைமேதையல்லவா இவர் ? பெண்களை அவமதித்து அவர்களின் உடலுறுப்பை கொச்சைப்படுத்தி பாட்டெழுதிய எழுதிய ஆசாமி தானே இந்த சொம்பு !! ஃப
லிட்டில் சூப்பர் ஸ்டாராம் !! இப்படியும் மனதில் ஓர் ஆசை !! சில குறைகள் பேசப்பட்டாலும் நிறைய நிறைகள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் என்பது உலகறிந்த விடயம், தன் பருவ வயதில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டு வாடியவர் என்று அவர் வரலாறு அறிவித்தாலும் பொதுவில் பெண்களை உம்போல் இழிவுபடுத்தாத ஒரு மனிதன் !! அதனால்தான் எம் தந்தை வயதிலும் இன்றும் அவர் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார், நீயெல்லாம் அவர் கால் தூசு..!! அந்தப் பட்டத்திற்கு நீ அருகதையற்றவன்.
பெண்ணின் உறுப்பை வைத்து பாட்டெழுதும் நீ எத்தனை கேவலமானவன் என்பதை உலகமே அறியும். உண்மை அன்புடன் நேர்மை நிறைந்த ஆண்மைக்கே எந்தப் பெண்மையும் அடிபணியும் என்பது இயற்கை சொல்லும் பாடம், நீ கேனத்தனமாய் சில பெண்களிடம் நடந்து, அந்த விரக்தியில் ஒட்டுமொத்த பெண்குலத்தையே( உம் பாட்டி, தாய், சகோதரி, மனைவி, மகள் பேத்தி என ) என உம் இழிவான பாட்டால் பெண்மைக்கே அவமதிப்பு செய்வாயா ?
எந்தத்தாயின் கருவறை வாயில் உனக்கு இம்மண்ணில் வந்து விழ வாசல் அமைத்துத் தந்ததோ, அந்த உறுப்பையே கேலிசெய்து பாட்டெழுதிய உன்மத்தனே, நீயெல்லாம் மனித பிறப்பா ? இதுவெல்லாம் ஒரு பிறப்பு, இதெல்லாம் ஒரு பிழைப்பு, என்ன இழிவான குணம் ? இதிலே உன்னை
ஒழுங்காய் வளர்க்கத்தெரியாத உம் தந்தையின் “சப்போர்ட்டு” வேறு உமக்கு !! நல்லா வெளங்கிடும் !! உனக்கொரு விடயம் சொல்வேன் கேள்..
எங்கள் நாட்டில் டி.எம்.எஸ் அடைமொழி கொன்ட மூத்த இசைக்கலைஞர் அவர். அவர் மகள் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நடத்திய பாடல் திறன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடினார். அந்த மூத்த கலைஞரிடம் அவர் மகளின் வெற்றி குறித்து பேட்டி எடுக்கப்பட்டது. அந்தக் கலைஞர் “தன் மகளைவிடவும் பிற போட்டியாளர்கள் சிறப்பாய் பாடினார்கள் என தன்னடக்கத்துடன் பதிலளித்தார்.(அந்தப் போட்டியில் அவர் மகள் மிக சிறப்பாகவே பாடினார் என்பது வெள்ளிடைமலை) அவரெங்கே ? கேவலமான செயல் புரிந்த தன் மகனை கண்டிக்கும் திராணியற்று, பொதுவில் பெண்மையை இழிவுபடுத்திய தன் மகனின் ஈனச் செயலுக்கு மன்னிப்புப் கோரும் பெருந்தன்மையற்ற, ஒழுங்காய் பிள்ளையை வளர்க்கத் தெரியாத, “வரிப்புலி, கறிப்புளி” என நகை வசனம் பேசும் உம் தந்தை எங்கே ? இந்த இலட்சனத்தில் இங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீதிபதி பொறுப்பு வேறு !!
உண்மையில் ஆஸ்ட்ரோ தமிழ்ப்பிரிவுக்கு கொஞ்சமேனும் தன்மானமும், சமூகப் பற்றும் இருந்தால் நம் நாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்ற பிறரைக் கேவலப்படுத்தும் வகையில் நடந்துகொள்பவர்களையும், அதற்கு துணை நிற்பவர்களையும் அழைக்காமல், நமது நாட்டு மூத்த இசைகலைஞர்களுக்கு அப்பொறுப்புகளைத் தந்து அவர்களை கெளரவிக்க வேண்டும், வாழ வைக்க வேண்டும், செய்வார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி
தங்க புஷ்பம் தாங்கள் கூறியது உண்மையென்றால், இவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் அனைவரும் இவர்களை கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரம் இல்லை. தாய்மையை மதித்து போற்ற தெரியாதவன் மதித்து போற்றாதவன் மனிதனே அல்ல. படைத்த இறைவனே வருத்தப்படுவார். ஆனாலும் இவர்கள் திருந்த வேண்டுமென்பதே எமது விருப்பம். செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டும் அதனை பெறவும் வேண்டும். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஏதோ பையன் நல்ல பேரு எடுக்கப் பார்க்கிறார்! இனியாவது நல்ல வழியில் செல்ல அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்! இனிமேலும் அவர் தனது “பீப்” பை விடமாட்டேன் என்றால் அவர் படங்களைப் புறக்கணியுங்கள்!
தமிழன் அல்லாதவந்தான் பீப் பாடலை இன்னும் பாடுகிறான் ! போங்கடா !