கணினித் திரைகளை அதிக நேரம் பார்வையிடுவதால் ஒருவரது கண்பார்வை பாதிக்கப்படும் என்பது பொதுவாக நாம் அறிந்த விடயம். ஆனால் மாறாக அவை ஒருவரது கண் பார்வை முன்னேற்றத்திற்கு உதவும் என்பது நம்மில் அநேகரை ஆச்சரியப்பட வைக்கின்றது.
நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சியாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு மென்பொருள் அமையும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் அடுத்த ஆண்டு முற்பகுதியில் வெளிவரவுள்ளது. ஆரம்பத்தில் கைதொலைபேசியின் மென்பொருளாகவே பாவனைக்கு வரும் இம்மென்பொருள் பின்னர் கணினிகளுக்கென வெளிவரும் என்று கூறப்படுகின்றது.
UCANSI என்ற அமெரிக்க நிறுவனத்தினால் உருவாக்கப்படும் இந்த புதிய மென்பொருளுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இதன் விலை 60 பவுண்களாக இருக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது.