கபாலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

pic003ரஜினியின் ‘கபாலி’ சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்சிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. இங்கிலாந்துக்கு அடுத்து பிரான்சில் ரஜினி படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான ‘ரெக்ஸ் சினிமா’ அரங்கம் உலகப் புகழ் பெற்றது.

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அரங்கம் இதுதான். அந்நாட்டு கட்டிடக் கலையின் சிகரமாக ரெக்ஸ் திரை அரங்கை பிரான்ஸ் நாடு அறிவித்து இருக்கிறது.

2 ஆயிரத்து 800 பேர் அமர்ந்து இருக்கும் வசதி கொண்ட இந்த பிரமாண்ட அரங்கில் இதுவரை ஹாலிவுட் படங்களும், டிஸ்னியின் படங்களும் மட்டும்தான் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டுள்ளன.

இப்போது முதல் முறையாக ஜூலை 14–ந் தேதி ரஜினியின் ‘கபாலி’ படம் இந்த அரங்கில் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு பிறகு இங்கு சிறப்பு காட்சியாக திரையிடப்படும் முதல் படம் ரஜினியின் ‘கபாலி’தான் என்ற பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது.

கடந்த 65 ஆண்டு சினி வரலாற்றில் ‘ரெக்ஸ் சினிமா’ அரங்கில் ஹாலிவுட் படம் அல்லாமல் ‘கபாலி’ திரையிடப்படும் சிறப்பு காட்சி பற்றிய அறிவிப்பை இந்த அரங்கின் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

-http://tamilcinema.news