புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டது முதல், பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரியில் மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினி காந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புவதாக கிரண் பேடி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
இந்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்கி இருக்கிறது. அதேபோல் தற்போது பொறுப்புகளையும் அளித்துள்ளது. நாங்கள் இனி தொழில்துறை பாதையில் பயணிக்க போகிறோம்.
ரியோ ஒலிம்பிக்கிற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்காக விளையாட்டுத் துறை மந்திரியிடம் பேசியுள்ளோம். அவர் எங்களை விளையாட்டு கூட்டமைப்புடன் இணைப்பார்.
மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினி காந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புகிறோம். அவரது வேண்டுகோள்களும், செய்திகளும் புதுச்சேரியை ஆரோக்கியமானதாக மாற்றும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாதாக கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக பொதுத் துறை சேவைகளை பயன்படுத்துவோருக்கு அப்பட டிக்கெட்டுகளை கிரண் பேடி பரிசாக வழங்கினார். அப்போது இதே கருத்தினை அவர் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-http://tamilcinema.news