பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் இன்று காலமானார்.
இவருடைய ஆழ்ந்த மொழி அறிவும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் இவரது திறமை வியப்புக்குரியது.
வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தைகள் எனும் சவுக்கினை எடுத்து விளாசுகிற ஓர் தமிழ் கவியாக இவர் வாழ்ந்து வந்தார்.
முடிவுற்ற இவரின் வாழ்க்கைப் பயணம் பற்றி ஓர் தொகுப்பாக இங்கே பார்ப்போம்.
-http://www.tamilwin.com
இந்த செய்தியை பார்த்ததும் கத்தியே விட்டேன், அதிர்ச்சியில்! ந.முத்துக்குமார் ஒரு தமிழ் தாயின் தவபுதல்வன். இவரால் தமிழ் தாயும் இவரை ஈன்ற தாயும் பெருமை அடைகின்றனர். கற்றது தமிழ் MA என்ற படம் பார்த்து விட்டு, அதில் வரும் “பறவையே எங்கு இருக்கிறாய், பறக்கவே என்னை அழைக்கிறாய், தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே ….என் பூமி தொடங்கம் இடம் எது நீதானே… முதல் முறை வாழ பிடிக்குதே, முதல் முறை வெளிச்சம் பிறக்குதே… முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ” என்று வரிகளை முணுமுணுத்ததும், கவி பேரரசு வைரமுத்து தான் எழுதி உள்ளார் என்றிருந்தேன். அப்படி ஒரு உன்னதம். பிறகுதான் தெரிந்தது, எழுதியவர் ந.முத்துக்குமார் என்று. காலனுக்கு பட்டு கோட்டை கல்யாணசுந்தரத்துடன் தன் இரக்கமற்ற வேலையை நிறுத்தி கொள்ள மனமில்லை போலும். அதே கதை இவரிடமும். 41 வயதுதான் ஆகிறது ….