கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு

kamalசென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல்.

தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com