தமிழ் சினிமாவில் டாஸ்மாக் பாடல்களோடு சமீபத்தில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா பாடல்களில், காதல் சோகத்தை வெளிகாட்ட, மது குடித்து ஹீரோக்கள் பாடுவது போல காட்சிகள் வருவது வழக்கம். இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயம்.
ஆனால் இப்போது இது டிரெண்டாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் மதுக்கடை காட்சிகளும் பாடல்களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. டாஸ்மாக் கடை பாடல் இடம்பெற்றால் படம் ஹிட்டாகும் என்று கூறப்படுவதால் இப்படியான பாடல்கள் அதிகரித்து வருவதாக கோடம்பாக்கத்தில் கூறுகின்றனர். –
படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்… காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்… தோல்வி அடைந்தால் டாஸ்மாக்… காமெடி என்றால் டாஸ்மாக்… கானா பாடல் என்றால் டாஸ்மாக்… விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.
அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும். ஒவ்வொரு படம் தொடங்காவதற்கு முன்பு குடி உடல் நலத்துக்கு தீங்கானது என்று டைட்டில் போடுகிறார்கள். ஆனால் எல்லாம் பேருக்கு தான்.
-http://www.cineulagam.com
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த போதை என்பது, குளிர் பிரதேசங்களில் வேர்க்காதவர்கள், வேற்பதற்காக குடிக்க கண்டு பிடிக்க பட்ட்து. குளிர்நிலைகளில், ஆல்கஹால் சூட்டை உற்பத்தி செய்து, வியர்க்க வைக்கிறது …..ஆகவே BEER அல்லது LIQUOR என்பது குளிரை கட்டு படுத்த மேற்கத்திய கண்டு பிடிப்பு. இந்தியாபோன்ற நாடுகள், இயற்கையாகவே வெப்பம் கொண்ட நாடுகள். எனவே கடவுள் கல் போன்ற போதை தரும் திரவத்தை கொடுத்திருக்கிறார். சூட்டை தணிக்க….. பழங்காலத்தில் இந்தியர்களில் ‘கல்’ அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிக்கு தர பட்டிருக்கிறது. கடந்த 300 ஆண்டுகளாகத்தான் இந்த மேற்கத்திய போதை நம்மவர்களை கவந்திழுக்கிறது…. எனவே, மீண்டும் கல் உற்பத்தியை மேற்கொண்டு, மேற்கத்திய திரவங்களை தடை செய்து, குடிகார நோயாளிகளை குண படுத்த வேண்டும். 3 ஆண்டுகளில், 20,000 ஏக்கர் கல் தோப்பில், 20 கோடி இந்திய மக்களுக்கு வேண்டிய கல்லை உற்பத்தி செய்யலாம். இதை மத்திய அரசாங்கமே செய்யலாம். குடிகாரர்கள் மாரு வாழ்வு திடடம். … வரும் 20 ஆண்டுகளில், இந்த குடிப்பழக்கத்தை கட்டு படுத்தலாம். கள்ள சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆயுள் எனும் தண்டனையை வழங்க வேண்டும். இப்பொழுது இருக்கும் நோயாளிகளை குணப்படுத்தி, நாளைய இளைஞர்கள் திருந்த என் கருத்தை முன் வைக்குறேன். இதற்க்கு ஒருவன் திராவிடனாகவோ, இந்துவாகவோ, இல்லை தமிழனாக இருக்க தேவை இல்லை. மனிதனாக இருந்தால் போதும்.
இல்லைன்னா தண்ணிய குடிக்க மாடடானுங்க பாரு ,,யோவ் ,தில்லு இருந்தா மது தயாரிக்கும் நிறுவனத்தை மூட சொல்லுங்க பார்ப்போம்
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் மதி கெட்ட இனமாகி விட்டோம் என்பதே. பேசவே எரிகிறது– இவ்வளவு ஈன ஜென்மங்களா நாம்? உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது ஆனால் தமிழன்கள் இன்றும் அட்டைக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான்கள்.
இனவெறி மதவெறி ஜாதிவெறி போதையிலே அலையுறவங்களை குடிபோதைக்காவது அடிமை படுத்தி அனைவரையும் சமமாக்கி விடலாம்னு டாஸ்மாக் கடைகள் முயற்சியையும் கெடுத்துடுவீங்க போலிருக்கே
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் .அது ஒழிந்தால்தான் தமிழன் தன்னிலை அறிந்து முன்னேற முடியும் .குடி குடியை கெடுக்கும்
தமிழ்ச் சினிமா மட்டும் தானா போதையில் தள்ளாடுகிறது? ஆட்சியில் இருப்பவர்களும் சரி, எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் சரி, அனைவருமே போதையால் தள்ளாடுகிறார்கள்! கோன் எப்படியோ அப்படியே குடியும்! தமிழ் நாட்டில் யார் இதனை ஊக்குவித்து தமிழனுக்குப் போதை ஏற்றினார்களோ அவர்கள் குடும்பங்கள் முதலில் அழிய வேண்டும் போதையினால்!
யாருவேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். எப்படி சரி செய்வது என்பதுதான் விவேகம், காலத்திற்கேட்ப தேவை. போதைக்கு அடிமையானவனை, வெறியனாக மாத்தும் எந்த வழிகளையையும் அரசாங்கம் மேட்கோள்ளது. திடீர் பலகாரம் போல் திடீர் கடை அடைப்பு, திடீர் முடக்கம் என்று திடீர் திடீர் என்று செய்ய முடியாது. அது சமூக பிரச்சனையாகும். எனவே அறிவுடன்தான் செயலாற்ற வேண்டும். இவ்வளவு ஏன்? அறுவைசிகிச்சைக்கு முன் தரப்படும் மயக்க மாத்திரை முதல் காய்ச்சலுக்கு தரும் மாத்திரை வரை போதை தன்மை கொண்டதுதான். நமக்கு தெரிய வில்லை எதனுடன் எதனை கலந்தால், போதை மேலோங்கும் என்று. விளங்க வில்லை என்றால் உடனே எவன் மீதாவது பழியை போடுவதுதான் இப்ப நல்ல பெஷன். அப்படி பழிபோடும் பட்ச்சத்தில், நான் நல்லவன் ஆகிவிடுகிறேன் என்று நினைத்து கொள்கிறார்கள் …. பாவம் இவர்கள் .. தன் நிலையே தன் சித்தாந்தம் என்று நினைப்பவர்கள் ….
‘எவன் மீதாவது பழிபோடுவது” அப்படியெல்லாம் எவன் மீதாவது பழிபோடுவது ஒன்றுமில்லை.அரசியல்வாதிகளின் மீது தான் பழிபோடுகிறோம். பள்ளி, கல்லூரிகள் அருகில், கோவில்களுக்கு அருகில் சாராயக்கடைகளைத் திறப்பது ஆளுங்கட்சிகளிலுள்ள அரசியல்வாதிகள் தான். ஒரு மைலுக்கு ஒரு சாராயக்கடையைத் திறந்து விட்டு “நீ குடிக்காதே!” என்றால் குடிக்காமல் இருப்பானா? தமிழனைத் திட்டமிட்டு அழிக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். தெய்வம் நின்று கொல்லும் இந்த அரசியல்வாதிகளை!
ஆபிரகாம் தேரா, எல்லா காரியத்திற்கும் ஒருவன் இருந்து கொண்டேதான் இருப்பான். அவனை ஏசுவதனால் அந்த பிரச்னை தீரவே தீராது. மீண்டும் மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும். தங்களை போன்று …. எனவே ஒரு நிரந்தர வழியை சொல்லுங்கள். அது பாதிக்க பட்டவர்களின் வாழ்க்கையையோ அல்லது பதவியில் இருபவர்களையோ மாற்றும்….. அதை விடுத்து எப்ப பார்த்தாலும் எதோ ஒரு ஜாதி பிரிவையோ அல்லது மத பிரிவையோ அல்லது மற்ற மொழி காரனையோ ஏசி கொண்டிருந்தாள், பிரச்னை தன்னாலே மாறிவிடும் என்பது பகல் கனவு. இப்படித்தான் 50 ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னை முடியாமல் இருக்கிறது …..
நண்பா! என்னால் செய்ய முடிந்த காரியமாக இருந்தால் நான் நிச்சயமாக செய்வேன்! என் ஜாதிக்காரன் என் கண்முன்னே அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் ஈன ஜென்மம் அல்ல நான்! தெய்வ நம்பிக்கை உள்ளவன். நிச்சயம் இதற்கு காரணமானவர்களை தெய்வம் நின்று மட்டும் கொல்லாது. அணு அணுவாகக் கொல்லும்!
அயோ பாவம்