சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விவேக் ‘ரம்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பேசிய நடிகர் விவேக், இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக அரசு, பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை உள்ளன. தற்போது மக்களும் செய்திகளை பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
சமூகவலைதளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்ததை சிலர் வீடியோவில் படம்பிடித்து பரப்பி இருக்கிறார்கள். அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு நிறைய நல்ல விடயங்கள் உள்ளன. கலவரங்களையோ, வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
நீங்கள் சினிமாவில் என்ன சொல்லிக் கொடுக்கின்றிர்களோ அதைத்தான் அவர்கள் செய்தார்கள்! நல்லதைச் சொல்லிக்கொடுக்க உங்களுக்கு மனமில்லை! பிறகு ஏன் குறைச் சொல்லுகிறீர்கள்?
இதை கூடவா சொல்லி கொடுக்க வேண்டும் ?? ஒரு உயிர் ஆபத்தில் இருப்பதை கண்டால் உதவி செய்யாமல் வீடியோ எடு என்று எந்த மடையனும் சொல்லி கொடுப்பதில்லை.. அதை கூட யோசிக்க முடியாமல் இருக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது? அடுத்தவரின் வேதனையை / வலியை கூட சமூகவலைதளங்களில் பரப்பி புகழ் தேட நினைக்கும் ஜந்துக்களை என்ன செய்வது ?