நடிகர், நடிகைகளுக்கும் ஆப்பு வைத்த பிரதமர் மோடி

narendra-modi5-600பிரதமர் மோடியின் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்தால் நடிகர், நடிகைகளின் சம்பளம் பல மடங்கு குறைகிறது.

மோடியின் இந்த புதிய திட்டத்தால் மக்கள் சரியான பணப்புழக்கம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இது திரைத்துறையையும் தற்போது பாதித்துள்ளது.

நடிகர்- நடிகைகளுக்கான சம்பளம் காசோலையாகவும் ரொக்கமாகவும் கொடுக்கப்படுகிறது. ஒருநாள் படப்பிடிப்புக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது.

ஆனால் பழைய நோட்டுகளை மாற்றி புதிய பணத்துடன் படப்பிடிப்பை உடனடியாக தொடர்ந்து நடத்துவது என்பது முடியாத காரியமாக இருப்பதால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் ஒருவர், மோடியின் இந்த திட்டத்தால் சினிமாவில் பணப்புழக்கம் குறையும். இதனால் தயாரிப்பு செலவுகளும் நடிகர்- நடிகைகள் சம்பளமும் குறையும். அனைவரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com