தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அமீர், அதுமட்டும்மில்லாமல் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் தலைவராக பணியாற்றிவர் அமீர். சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தை ரஜினிகாந்த் மனதார வரவேற்றார், உங்களால் புதிய இந்தியா பிறந்தது என்று புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் அமீர், பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என ரஜினி எப்படி கூறுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கபாலி பட வருமானம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா? என்றும் கூறினார். கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா, மொத்த படத்தின் வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? எனவும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்ததற்கு வரவேற்பு அளித்தது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-http://www.cineulagam.com


























நல்ல கேள்வி ,அடுத்த கேள்வி ?