சினிமாவில் இப்போதெல்லாம் செக்கில் மட்டுமே அனைவருக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் என செய்திகள் வருகின்றன.இதை பார்த்தவுடன் ‘மோடிடா.. எவனுமே மாத்த முடியாத சினிமா உலகத்தின் கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாருடா’ன்னு பரவச பஜனைகள் ஆரம்பிக்கும்முன் சில சுவாரஸ்ய விசயங்கள்.
சினிமா உலகத்துல செக் குடுக்குறதெல்லாம் பெருமையில்லை.. ஏன் செக் குடுக்கப்படுகிறது என எல்லா சினிமாக்காரர்களுக்கும் தெரியும். காசில்லை எனும்போது அதை சொல்லாமல் காலம் தாழ்த்துவதற்கு மட்டுமே செக் கொடுக்கப்படும்..
சினிமா இன்ட்ஸ்ட்ரியில் வேலை செய்து தான் வாங்கிய 20 செக்-குகளில் ரெண்டு செக்காவது பேங்கில் போட்டவுடன் கிளியரானது என யாராவது சொன்னால் ஒன்று அவர்கள் பொய் சொல்கிறார்கள்.. அல்லது பொய் சொல்கிறார்கள். 20 செக்குக்கும் குறைவாய் வாங்கியிருத்தால் அவர் சினிமாக்காரரேயில்லை.
(இதில் அசிஸ்டென்ட் டைரக்டரைகளை சேர்க்க கூடாது. பாதிப்பேருக்கு அட்ரஸ் ப்ரூப்பே பிரச்சினை, இதுல எங்க பாங்க் அக்கவுண்டு ஓப்பன் பண்ணி செக்குவாங்குறது ) தயாரிப்பாளருக்கு கண்டிப்பாய் சம்பளம் கேட்டு நெருக்கடி தரும் சூழலில் அவரது கடைசி அஸ்திரம் செக். நாலு நாள் தள்ளி டேட் போட்டு செக்கை கொடுத்துவிட்டு நாலாவது நாள் போன் போட்டு இன்னிக்கு போடவேண்டாம் ஒரு ஒருவாரம் தள்ளி போடமுடியுமா என கேட்பது வாடிக்கை. அப்படி நாலுதடவை நடந்து ஒருமாதம் ரெண்டுமாதம் கழித்து நேரில் சென்று காசாய் வாங்குவதுதான் எழுதப்படாத சட்டம். இதைபற்றி யாரும் பெரிதாய் அலட்டிக்கொள்வதும் இல்லை. கோர்ட் கேஸ்னெல்லாம் உடனே போய் விடுவதும் இல்லை. சினிமா இன்டஸ்ட்ரி இப்படித்தான். லட்சத்தில் ஒரு செக் பவுன்ஸ்தான் எந்த பஞ்சாயத்தும் எடுபடாமல் கோர்ட்டுக்கு போகும்.
சினிமாவில் இயக்குநராக வாய்ப்பு தேடி அலையும் பலருக்கு ஆடி மாதம் வந்தால் ஒரு நிம்மதி வந்துவிடும். இப்ப என்ன பண்றீங்க என் கேள்விக்கு மற்ற மாதங்களில் சங்கடமாய் நெளியவேண்டிவரும். ஆனால் ஆடி மாசத்தில் தெம்பாய் புரொட்யூசர் ரெடியா இருக்காரு இந்த ஆடி மாசம் முடிஞ்சதும் ஆரம்பிக்கோறேம் என எஸ்கேப் ஆக முடியும். இந்த 500,1000 செல்லாது என்ற அறிவிப்பு தயாரிப்பாளர்களுக்கான ‘ஆடி மாச நிம்மதி’ அவ்வளவுதான். காசு எடுக்கமுடியல செக் வாங்கிக்கங்க என ஈசியா எஸ்கேப். அதனால இது பெருமைப்படும் விசயமெல்லாம் இல்லை. இயக்குநர்கள் உட்பட அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் சம்பாத்திய சிக்கலை தந்து வீட்டிலிருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையையும் கெடுக்கும். (இந்த செக்க வச்சு நாக்கா வழிக்கிறதாம்) அம்புட்டுதான். இன்னொரு விசயம் பாங்க் காரங்களுக்கு செக் பவுன்ஸ் பைன்லயே மாசத்துக்கு மூவாயிரம், ஆராயிரம்னு பைன் கட்டுரறதும் எங்க சினிமா ஆட்கள்தான் என்பதையும் அதற்காகவே பேங்காரர்கள் எங்களை எக்ஸட்ரா மரியாதையுடன் நடத்துவார்கள் என்பதையும் இங்கே பெருமையுடன் பதிவுசெய்ய கடமைப்பட்டுள்ளேன்! – ஜெய்லானி திரைப்பட இயக்குநர்