தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து உச்சத்திலேயே இருந்திருக்கிறார்கள்.
பலர் சில வருடம் முன்னணி இடத்துக்கு சென்றவுடன் தன்னிலை மறந்து ஆடி தன்னுடைய இடத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் கூட சில நடிகர்கள் கொஞ்சம் வெற்றிகள் வந்தவுடன் சரியான முறையில் நடந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
அந்தவகையில் பாரதிராஜாவால் கிழக்கே போகும் ரயில் மூலம் அறிமுகமானவர் சுதாகர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்கள் வெற்றி பெற்றது. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. ரசிகைகள் சுற்றி வரத்தொடங்கினர்.
இதில் குடிப் பழக்கமும் ஆரம்பித்தது சுதாகருக்கு.. பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பெரிய வெற்றி அடைந்த போதிலும் சுதாகர் கவனம் சிதறினார். சக்களத்தி என்கிற படத்தின் படப்பிடிப்புக்கு சுதாகர் போதையில் வந்தார் என்கிற வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இயக்குனர்கள் பயப்பட ஆரம்பித்தனர்.
நல்ல மார்க்கெட் இருக்கும் போதே புதுப்பட வாய்ப்புகள் மெல்ல குறைய ஆரம்பித்தது. பெண்கள் கூட்டமும் குறைந்தது. படங்கள் இல்லை. சம்பாதித்த பணம் எல்லாம் ஆடம்பர வாழ்க்கையில் கரைந்தது. முடிந்தது கதை. மூட்டை முடிச்சுக்களுடன் ஆந்திரா புறப்பட்டார் சுதாகர்.
அங்கு போயும் வாய்ப்புகள் தேடினார். ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. காமெடியன் ஆனார் சூப்பர் ஹீரோ சுதாகர்.
கோமாளி போல சேஷ்டைகள் செய்து நடிக்க ஆரம்பித்தார். பழக்க வழக்கங்கள் மட்டும் மாறவில்லை என்கிறார்கள்..! 600 படங்கள் வரை நடித்துள்ளாராம்.
கடந்த 10 வருடத்திற்கும் மேலாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். நடுவில் கோமாவுக்கும் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.cineulagam.com