வெளிநாட்டில் இறந்தவர்களின் உடல்களை கையில் போதுமான அளவு பணம் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முடியாமல் உறவினர்கள் தவிப்பதாக பிரபல நடிகரும் இசையமைப்பாளுருமான விஜய் ஆண்டனி உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
பிரபல நடிகரான விஜய் ஆண்டனி அண்மையில் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து பேசிய அவர் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் யாராவது இறந்து விட்டால் அவர்கள் உடலை தமிழநாட்டிற்கு கொண்டு செல்வதற்கு போதுமான அளவு பணம் அவர்களுக்கு கிடைப்பதில்லை என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் இறந்துவிட்டால், அவர் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.
இதை அவர்கள் உறவினர்களால் கொடுக்க முடியாத காரணத்தினால் இறந்தவரின் உடல் அங்கேயே இருக்கட்டும் என்று அவர்கள் கூறுவது மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் வெளிநாட்டில் இருந்து இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் தமிழர்களுக்கு இந்திய அரசும், மாநில அரசும் அதற்கு உதவிக் கரம் நீட்டவேண்டும் என கூறியுள்ளார். முடியாத அளவிற்கு 50 சதவீதமாவது கொடுத்து உதவலாமே என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
-http://news.lankasri.com