சென்னை: குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும், நிகழ்ச்சிக்கு வந்தவரின் சட்டையை பிடித்த குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகை ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
டிவிகளில் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடிகைகள் நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் நடுவராக உள்ள நடிகைகளே தீர்வு தேடி வருபவர்களிடம் சண்டைக்கு பாயும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வெட்கக்கேடு
பல்வேறு மொழிகளில் டிவி சேனல்களில் கவுன்சலிங் கொடுக்கிறேன் என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் வெட்கக்கேடு. நான் இந்த புகைப்படங்களை சன் டிவியில் வரும் நிஜங்கள் நிகழ்ச்சியில் இருந்து எடுத்தேன். இது தான் கவுன்சிலிங்கா?
நிகழ்ச்சிகள்
இது தாக்குதல், பாலின பாகுபாடு, பப்ளிக் நியூசன்ஸ். இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து ஏமாந்து விடாதீர்கள் மக்களே. இந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு உதவி செய்யவில்லை.
டிவி சேனல்கள்
பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் உதவி செய்வதற்கு பதிலாக அனைவர் முன்பும் உங்களின் மொத்த குடும்பத்தையும் கேவலப்படுத்துகின்றன. உங்களை பயன்படுத்தி டிவி சேனல்கள் பணம் சம்பாதிக்கின்றன.
நடிகைகள்
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு ஏழைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க எந்த தகுதியும் இல்லை. என்.ஜி.ஓ.க்களிடம் கவுன்சிலிங் பெறுங்கள். நீதிமன்றத்தை சந்திக்கும் முன்பு அந்த நபரிடம் பொது மக்கள் முன்பு குஷ்பு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.
நீங்கள் சொல்லுவது சரி தான் என்றாலும், தகுதி என்று வரும்போது, நடிகைகள் தான் அதற்குச் சரியான தகுதியானவர்கள். காரணம் அவர்கள் ஏற்கனவே இது போன்ற அடாவடித்தனங்களிலிருந்து தான் அடிபட்டு நடிகைகளாக வந்தவர்கள். தீர்வு அவர்களுக்குத்தான் தெரியும்! நிஜங்களும் அவர்களுக்குத் தான் தெரியும்!