ராகவா லாரன்ஸ் இன்று நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர் என பல ரோல்களை செய்து வருகிறார்.
மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்ட, உயிருக்கு போராடும் பல இளம் குழந்தைகளுக்கு நிதி உதவி செய்து காப்பாற்றி வருகிறார்.
மேலும் தனியே சேவை அமைப்பு மூலம் பல குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் குழந்தையிலிருந்து வளர்த்த சாமுவேல், ஸ்வாதி, அபிநயா ஆகியோர் இன்று வளர்ந்து விட்டனர்.
அவர்களது குறிக்கோள் நிறைவேற உங்களது ஆசிர்வாதமும், ஆதரவும் தேவை என அவர் கூறியுள்ளார்.