குஷ்பு நிகழ்ச்சிக்கு எதிராக மீண்டும் ஸ்ரீப்ரியா ட்வீட்

001குடும்ப பிரச்சனைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் டிவி நிகழ்ச்சிகள் பற்றி சென்ற வாரம் நடிகை ஸ்ரீபிரியா சொன்ன கருத்து பெரிய பிரச்சனையாக வெடித்தது.

அவர் கருத்துக்கு பதிலடி கொடுத்து குஷ்பு, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இது ஒருபுறமிருக்க தற்போது ஸ்ரீபிரியா புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அந்த குடும்பத்திற்கு என்ன ஆகிறது என பத்திரிகையாளர்கள் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் உளவியல் ஆலோசனை என்பது சிகிச்சை பெறுபவருக்கும் உளவியல் நிபுணருக்கு மத்தியில் தான் நடக்கும். கேமரா முன்பு நடக்காது. அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com