அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நானும் நிறுத்துறேன்: நடிகை ஸ்ரீப்ரியா ஆவேசம்

sripriyaசென்னை: குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கூறுங்கள் நான் அது பற்றி எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன் என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு, கீதா, ஊர்வசி ஆகியோர் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். பஞ்சாயத்துக்கு வரும் இடத்தில் பெரும் பஞ்சாயத்துகளும் நடக்கின்றன.

ஸ்ரீப்ரியா

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக முதன்முதலாக நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்தார். அதை நடிகை ராதிகா சரத்குமார் ஆமோதித்தார். நடிகை ரஞ்சனி ஒரு பக்கம் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்.

பஞ்சாயத்து

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் என்று கூறியுள்ளார் ஸ்ரீப்ரியா. மேலும் நடிகை, குழந்தைகளுக்கு தாய் என்பது மட்டும் இந்த நிகழ்ச்சிகளை நடத்த தகுதியாகிவிடாது என்று ஸ்ரீப்ரியா தொடர்ந்து கூறி வருகிறார்.

நிறுத்துங்கள்

இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அல்லது பெரியவர்களின் பிரச்சனைகளில் குழந்தைகள் தலையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறுங்கள் நானும் இது பற்றி எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா.

ஆதரவு

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஸ்ரீப்ரியாவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து அவர்களும் ட்வீட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com