மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்தவர் ஜெயராம். இவர் சமீபத்தில் தன் நண்பர் ஜல்லிக்கட்டு குறித்து எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினார்.
அந்த புகைப்படங்களை பார்த்த பிறகு ‘எனக்கு ஜல்லிக்கட்டு மிகவும் பிடிக்கும், அதை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஸ்பெயினில் ஒரு மாட்டை பல வருடமாக இருட்டு ரூமில் அடைத்து வைத்து பிறகு அதை வெளியே விடுவார்கள்.
அதை சிலர் கொன்று, அதன் காதை அறுப்பார்கள், அந்த மாதிரி கொடுமையெல்லாம் இங்கு கிடையாது, அதனால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
மஞ்சுவிரட்டு தமிழ் கலாசாரத்தோடு ஒன்றுபட்டது .இது மிருகவதை என்றால் லட்சக்கணக்கான மாடுகளை வெட்டி உலகம் முழுதும் ஏற்றுமதி செய்வதை என்னவென்று கூருவது. தமிழையும் தமிழர் கலாச்சாரத்தையும் அறியாத அந்த இரு வடமாநில குழுக்களும் எடுத்த முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .