சென்னை: தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்தின் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எந்த வகையான அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு ரஜினிகாந்துக்கு எந்த தகுதியுமே இல்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது; ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதை முதல் ஆளாக எதிர்ப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஐயா சரத்குமார் அவர்களே– இவ்வளவு காலம் தமிழர் அல்லாதவர் ஆட்சிதான் நடக்கிறது? அதிலும் அதிகாரத்தில் இருந்த ரெட்டி ராவ் என்ன தமிழர்களா? மற்றவர்கள் தானே நாட்டை சுரண்டிக்கொண்டிருக்கிறான்கள். அப்போது ஏன் ஒன்றும் ஒன்றும் சொல்லவில்லை? சொல்லி இருந்தால் கன்னடச்சி உன்னை விட்டு வைத்திருக்க மாட்டாள். உனக்கும் அது தெரியும் அதனால் தான் நீயும் வாயை பொத்திக்கொண்டிருந்தாய். தமிழ் நாட்டை முழுமையாக ஆண்டு கொண்டிருப்பதே மற்ற ‘ திராவிடர்கள்” தானே? தமிழ் நாட்டு தமிழர்களுக்கு யார் ஆண்டாளும் அக்கறை இல்லை– என்னைப்பொறுத்த மட்டில் தன்னை தமிழனாக தமிழுக்காக தமிழர்களுக்காக யார் உண்மையிலேயே பாடுபடுகின்றாரகளோ அவர்களே பொருத்தமானவர்கள்– தமிழனையே நம்ப முடியவில்லை பிறகு இவர்கள்?
தமிழ் தமிழ் என்று சொல்லியே தமிழ் நாட்டுக்காரர்கள் பெடரல் நிலையில் வருவதற்க்கு வழி வகுக்க முடியவில்லை.. அந்த நிலையில் வருவது என்றல் இந்தி படிக்க வேண்டும் .ஆதலால்
ஒரு தமிழர் பிரதமர் நாடகாலியில் உட்கார முடியாது.