தற்போது வாட்ச் ஆப்பில் வைரலாக பரவி வரும் வாசகம் நான் தமிழன் என்பதை நீ அழிக்க நேர்ந்தால் , நான் இந்தியன் என்பதை இழக்க நேரிடும் என்பது தான்..
ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால், வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அன்று தமிழ்நாடு முழுவதும் அறைக் கம்பத்தில் தேசியகொடி ஏற்றப்படும். எவரது நெஞ்சிலும் தேசியகொடியை ஏற்ற மாட்டோம். இது எச்சரிக்கை அல்ல தமிழர்களின், தமிழ் மாணவர்களின் முடிவாக இருக்கும் என்று தமிழ் நடிகர் சிம்பு ஆவேசமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும், கூறியதாவது, மாணவர்களின் போராட்டம், தமிழர்களின் போராட்டம். அவ்வளவு எளிதாக மாணவனை அடக்கிவிட முடியாது. தமிழர் நாங்கள் சொல்வதை முதலில் நீ கேள். அப்புறம் நாங்கள் கேட்கிறோம். தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு எங்களுக்கு தேவையே இல்லை.
நான் முதலில் தமிழன் அப்புறம் தான் நடிகன். இதை நான் திமிராக சொல்லுவேன்.
ஜல்லிக்கட்டிற்காக ஆரம்பத்திலிருந்தே போராடும் நடிகர் சிம்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், நானும் போராட்டக் களத்திற்கு வர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தெரிவித்துள்ளது மீண்டும் மாணவர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– manithan.com
ஆயிரம் கருத்துவேருபாடு இருக்கலாம்
என்றாலும் தமிழனின் பண்பாட்டுக்கு இழுக்கு
என்றால் வீர்கொண்டெழுவான்.தான் ஆடா
விட்டாலும் அவன் சதை ஆடும்.போராட்டம்
வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.