உண்மையான சூப்பர் ஸ்டார் இவர் தான்!

raghava-lawrenceதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அனைவரும் ரஜினிகாந்த் தான் என சொல்வர். மக்களை பொறுத்தவரை இப்போதெல்லாம் ரியல் சூப்பர் ஸ்டார் என்று சிலரை அடையாளம் காட்டுகிறார்கள்.

ஆம். கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்தது மக்கள் அவதிப்பட்ட நேரத்தில் தன்னை வெளிக்காட்டாமல் மக்களுக்கு உதவி செய்தவர்கள் பலர்.

தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது தன்னிடம் உதவி வேண்டும் என்று வந்த ஒரு குருந்தகவலால் தந்தது பெருந்தன்மையை காட்டியவர் என்று ராகவா லாரன்ஸை போராட்டக்கார்கள் நினைக்கிறார்கள்.

எந்த நடிகரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்துள்ளார் ராகவா. போராட்டக்காரர்களின் உணவு, மருத்துவத்திற்காக ஒரு கோடி தருகிறேன், இன்னும் உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என போராட்ட களத்திலும் கேட்டுள்ளார்.

இளைஞர்களோடு இரவு பகல் பாராமல் அவர்களுக்கு உதவி செய்தவர் தனக்கு முடியாத சூழ்நிலையிலும் அதை தொடர்ந்துள்ளார்.

இதனால் இப்போது அவருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவர் தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் பல குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்து காப்பாற்றியுள்ளார்.

 -http://www.cineulagam.com