இளைய தளபதி விஜய் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர். இவர் இன்று அதிகாலையே இளைஞர்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.
நள்ளிரவு 2 மணிக்கு வந்த விஜய் அதிகாலை 5.30 மணி வரை இந்த அறப்போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
இதில் சிறப்பம்சமாக முகத்தை மூடிக்கொண்டு மக்களோடு மக்களாக அவர் 2 மணி நேரம் அமர்ந்துள்ளார்.
பிறகு விஜய் தன் கார் அருகில் செல்லும் போது தான் ஒரு சில கண்டுப்பிடித்து அருகில் வந்து பேசியுள்ளனர். வெளிச்சம் வந்துவிட்டால் பலரும் கூடி விடுவார்கள், போராட்டம் திசை மாறும் என்பதற்காகவே விஜய் அங்கிருந்து சென்றுள்ளார்.
-http://www.cineulagam.com