நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே சமூகம் சார்ந்த தன் கருத்துகளை உடனே வெளிப்படுத்திவிடுவார். அவ்வகையில் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தொடர் ஆதரவு அளித்து வருகிறார்.
தற்போது நடந்து வரும் தமிழரின் கலாச்சாரம் மீட்டெடுப்பு அறவழிப்போராட்டத்திற்கு அவ்வப்போது தனது கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் ட்விட்டரில் மக்கள் அனைவரும் உண்மையான ஜனநாயகத்தையே விரும்புகிறார்கள்.
அப்படியான தலைவர்கள் இருந்த காலம் போய்விட்டது. நமக்கு இப்போது சமூக நலம் கொண்டவர்களும், எளிமையானவர்களும் தான் தேவை என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் அமெரிக்கா நாட்டை சேர்ந்த குளிர்பான நிறுவனங்கள் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஸ்பான்சர் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா குளிர்பானங்களை போராட்டத்தின் போது பலரும் எதிர்த்ததால் அவற்றின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜல்லிக்கட்டில் பின்னணியில் பணம் வைத்து விளையாடப்படுகிறது என பீட்டா அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்கள். தற்போது அந்நிறுவனங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஸ்பான்சர் செய்தால் சூதாட்டமாக மாறும் என அவர் கருதுகிறார்.
-http://www.cineulagam.com
மீண்டும் தமிழர் பொற்காலத்தை நோக்கி பயணம்……இனி எவனும் நிறுத்த முடியாது…உறுதி!!!