இளைஞர்களுக்காக கஷ்டப்பட்ட லாரன்ஸிற்கு இப்படி ஒரு நிலைமையா?

ragavaராகவா லாரன்ஸ் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களுக்கு துணையாக ஆரம்பத்திலிருந்து இருந்தது. இன்று போராட்டம் நிலைமை கைமீறி போக போலிஸார் தடியடி நடத்தினர்.

இதை அறிந்த லாரன்ஸ் அங்கு விரைந்துபோக போலிஸார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதை தொடர்ந்து நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என லாரன்ஸ் போராட்டத்தில் இருந்தவர்களை நேரில் சந்தித்து கூறினார்.

ஆனால், ஒருவரும் கண்டுக்கொள்வதாக இல்லை, லாரன்ஸ் கருத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

-http://www.cineulagam.com

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடிக்கு கண்ணீர் மல்க பேசிய ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் தற்போது போலீஸ் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகின்றனர்.

இச்செய்தி அரிந்த ராகவா லாரன்ஸ் அவர்கள் ஒரு வீடியோவில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

எனக்கு பலர் போன் செய்து எங்களை அடிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். என்னையும் போராட்ட களத்தில் நெருங்க போலீஸ் அனுமதிக்க மறுக்கிறார்கள். விரைவில் நான் அங்கு வருவேன் கவலைப்படாதீர்கள் என்று கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com