மக்கள் தீர்ப்பை சசிகலா மதிக்க வேண்டும், ஓ.பி.எஸ் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும்.. கமல்ஹாசன்

kamalHassan.cmsசென்னை: மக்கள் தீர்ப்பை சசிகலா மதிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து ஆட்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா டுடேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஓ.பன்னீரசெல்வத்துக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளித்த பேட்டியின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா குறித்து எனக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. ஆனால் தற்போதைய நிலையில் நான் முதல்வரை ஆதரிக்க விரும்புகிறேன். காரணம், அரசியலில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சசிகலாவின் திறமை குறித்து எனக்குத் தெரியாது. அவர் எதையும் செய்ததாக தெரியவில்லை. மறைந்த முதல்வருடன் இருந்துள்ளார். அதுவே அரசியல் தகுதியாகுமா என்று எனக்குத் தெரியவில்லை.

முதல்வர் பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று கூற முடியாதவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். சசிகலா மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. திறமையாளர் என்று கமல் கூறியுள்ளார்.

-http://tamil.oneindia.com