நடிகர் கமல்ஹாசன் இப்போது நடக்கும் அரசியல் நிலை குறித்து தன் கருத்தை வெளியிட்டு வருகிறார். அவர் சமிபத்தில் கூறியதாவது நான் அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கவனமாக கண்கானித்து வருகிறேன்.
என்னுடைய கருத்துக்களை யாரும் தங்களுக்கு சாதமாக்கி வேடிக்கை பார்க்ககூடாது என்பதிலும் தெளிவாக் இருக்கிறேன். இதுவரை கடந்த 40 வருடங்களில் எந்த அரசியல் வாதியும் மக்களுக்கு சேவை செய்ததாக தெரியவில்லை.
மக்கள் நாங்களெல்லாம் ஆடுகள் கிடையாது எங்களை மேய்க்க நல்ல ஒரு மேய்ப்பாளர் தேவை என கோரிக்கை வைக்கவில்லை. மிகவும் உழைக்கும் எங்களுக்கு நல்ல உழைப்பாளிகள் தான் வேண்டும்.
பன்னீர் செல்வம் இன்னும் சில வருடங்கள் ஆட்சியை தொடர்ந்தால் என்ன, அவரது ஆட்சி திறமையற்ற ஆட்சிபோல் இருப்பதாக தெரியவில்லை. பின் அது குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்காக நான் அவரின் ஆதரவாளர் என நினைத்து விடாதீர்கள்.
மக்கள் விரும்புவதையே நானும் விரும்புகிறேன். சசிகலா முதல்வராவதில் எனக்கு விருப்பமில்லை. அவரது இந்த முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது.
நான் மக்களின் ரசிகன் தானே தவிர யாருக்கும் தலைவன் இல்லை என அவர் கூறியிருக்கிறார்.
-http://www.cineulagam.com
கமலஹாசன் அவர்களே அங்கு நடக்கும் எல்லாமே நம் இன தலை குனிவுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழ் நாடு இன்றும் முன்னேறாமல் அந்நியன் படத்தில் சொன்னாற்போல் இருக்கிறது. சட்டம்ம் ஒழுங்கு கிடையாது. 40 ஆண்டுகள் அங்கு மக்களுக்கு எந்த அரசில்வாதியும் ஏதும் செய்ய வில்லை என்பது கண்கூடு. அங்கு நடக்கும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள் குமட்டுகிறது. நாடு முன்னேற வேண்டும் மற்றவர்கள் நம்மை எள்ளி நகைக்கக்கூடாது என்று என்று எவனுக்கும் அக்கறை கிடையாது. வடக்கத்தியன்கள் தமிழ் நாட்டுக்கு என்ன மதிப்பு கொடுக்கின்றனர்? எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் ஊழல்கள் சுத்தம் கிடையாது-நாடு நகரங்களில் சிறுநீர்கழிப்பு சாலை ஓரம் மக்கள் வாழ்க்கை நடத்து கின்றனர். அங்குள்ள கட்டிடம் எல்லாம் சாயத்தை கண்டு எத்தனையோ காலம் ஆகிவிட்டது– அத்துடன் அங்கு மரியாதை என்பதே கிடையாது– தண்ணீர் பிராஃச்சனை சமுதாய பிரச்னை இன்னும் எவ்வளவோ. கட்சி வேறு பாடு இருந்தாலும் நாடு முன்னேற யாவரும் ஒத்துழைக்கலாமே?
கமல் சார்..!
சசிகலாவை எனக்கும் பிடிக்காது தான்.
ஒருவேளை சசி முதல்வராகிவிட்டால் நீங்க இந்தியாவை விட்டு ஓடிப்போயிடுவீங்களா?
தலைவனில்லாத ஒரு மக்கள் ஆட்சி சல்லிக்கட்டை போன்று பல வெற்றிகளை அடைய வழிவகுக்கும் .