செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று ஆவேசமாக நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம்.
தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.
பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.
இது சிவக்குமார் என்ற தனி நபரின் பேச்சு அல்ல.. ஒட்டுமொத்த அப்பாவித் தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். அரசியல்வாதிகள் எந்த லாபமும் பார்க்காமல் மக்களுக்காக இதைச் செய்ய முன் வருவார்களா?
-http://www.cineulagam.com
இந்திய அரசுக்கு ஒரு சரியான சவுக்கு அடி கொடுத்துள்ளார் நடிகர் சிவகுமார்.
வடநாட்டுக்காரனுக்கு தமிழன் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன . கேவல தமிழன் பொம்பளை காலில் விழுந்து விட்டான்களே. பன்றியின் மலத்தில் பிறந்தவங்க.
இளைஞர்கள் எழ வேண்டும் . ஜல்லிக்கட்டு எப்படி எழுந்து போராடினார்களோ . இந்த ஒட்டு மொத்த அரசியல் ஈனர்களையும் mafia குண்டர்களை துரத்தி விட்டு இந்த நாட்டை நல்ல இளைஞர்கள் வழிநடத்த வேண்டும் . தமிழ் நாட்டை தமிழ் இளைஞர்கள்தான் காப்பாற்ற எழ வேண்டும் . சினிமாவில் விழுந்து விட்ட இளைஞர்கள் நாட்டையும் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
ஊருக்கு ஒரு கிணறு தூறு செய்தால்
மற்றவன் தண்ணி வேண்டாம் என்று தமிழக
இளைஞர்கள் மண் சுத்தம் மன சுத்த விவேகத்துக்கு
வந்து விட்டார்கள் சிவகுமார்…அகரம் தண்ணிக்கு
நாடு முழுக்க ஆதாரம் தாங்கள் வென்றுவிடலாம் !
தமிழா தேசியம் மலேசியா
முதலில் இளைஞர்கள்” அரசியல்வாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் – நல்லாட்சியின் மாண்பை கொண்டுவரவேண்டும் – கொள்ளைக்கார அரசியல்வாதிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டும் – கோடி கோடி பேரத்தில் ஆட்சி நடத்தும் அயோக்கியர்களை ஆரம்பத்திலேயே களையெடுக்க வேண்டும் – செய்வார்கள் தமிழ் நாட்டு இளைஞர்கள் .
ஐயா சிவகுமார் அவர்களே– வடக்கத்தியனை சாடி ஒரு புண்ணியமும் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் என்று மக்கள் ஆக நடமாடுகின்றனரோ அன்றுதான் மாற்றம் ஏற்படும். தமிழ் நாட்டு மக்கள் எதற்கு எடுத்தாலும் ஊளை இட்டு கண்ணீர் சிந்தி தற்கொலைக்கு திறன் பட செயல் படு வது யார் தவறு? எவனோ ஒரு நாதாரி தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்யாமல் கையூட்டு கேட்டு மக்களை ஆட்டி படைக்கின்றனர் –அந்த நாதாரிகளை கேட்க நாதி இல்லை– அதற்க்கு அந்த நாதாரியை வெட்டி போடாமல் தான் தற்கொலை செய்து செய்வது என்ன முட்டாள்தனம்? அத்துடன் எதற்கு எடுத்தாலும் வேடிக்கை பார்ப்பதே வேலையாக போய்விட்டது. ஜல்லிக்கட்டுக்கு எழுந்தது போல் ஒரு எழுச்சி ஏற்பட வேண்டும். அத்துடன் மூளையை பாவித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வகை செய்ய வேண்டும்– ஆனால் நடக்காது -காரணம் தற்போது அங்கு நடக்கும் அரசியல் முட்டாள்தனத்தை வைத்து எதையும் சாதிக்க முடியாது. இஸ்ரேல் ஒரு பாலைவனத்தில் இருக்கிறது ஆனால் அங்கு தண்ணீருக்குக்காக தமிழ் நாட்டில் நடப்பது போல் நடப்பதில்லை– ஏன்? எல்லாம் புத்தியை பாவித்து நாடு நன்றாக இருக்க அறிவியல் வழி எல்லாவற்றையும் சாதிக்கின்றனர்.
நமது இன ஒற்றுமையின் பலம் ஜல்லிக்கட்டில் தெரிந்தது .அது தொடர வேண்டும் .தலைவன் நமக்கு தேவையில்லை என்பதை உணரவேண்டும் .எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் .நமது குறிக்கோள் ஒன்றாக இருக்க வேண்டும் .வெற்றிக்கு அது வித்திடும் .
ஐயா, தங்களின் மேலான கருத்தின் உண்மையை உணர முடிகிறது, இருப்பினும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி அவன் கொடுக்கவில்லை, இவன் கொடுக்கவில்லை எனும் கையேந்தி நிலை தொடரும் தமிழகத்தில்? இதற்குக் காரணம் ஆரம்பத்தில் நீர்நிலை மிகுந்த பகுதிகளை திட்டமிட்டே மத்திய அரசின் துணையுடன் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்கள் அபகரித்துக்கொண்டதுதான் என்பது வரலாறு கூறும் உண்மை. இப்படி தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் உறவு இன்னும் தமிழகத்திற்கு அவசியமா ?