ராகவா லாரன்ஸ் மக்களுக்காக சாலையில் இறங்கி போராடுபவர். இவர் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் கலந்துக்கொண்டு இளைஞர்களுக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு கிடைத்த வெற்றியை நேற்று பிரமாண்டமாக கேக் வெட்டி கொண்டாடினார்.
இதன் பிறகு பேசிய இவர் ‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் நான் பணம் வாங்கியப்படி எடிட் செய்து போடுகிறார்கள், அது மட்டுமின்றி ஒரு கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார்கள்.
நான் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவித்தேன் என்று நீங்கள் நிரூபியுங்கள், நான் தமிழகத்தை விட்டே செல்கிறேன், எனக்கு அரசியல் வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com

























