என்ன திமிர், என்ன ஆணவம், பதவி ஆசை, நல்ல டாக்டரா பாருங்க: விஷாலுக்கு சேரன் பொளேர்

cheran2.சென்னை: நடிகர் விஷாலை விளாசித் தள்ளி இயக்குனர் சேரன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தை தாக்கிப் பேசிய நடிகர் விஷாலை கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் நடிகர் சங்கத்தை அண்மையில் முற்றுகையிட்டனர். அப்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விஷாலை விளாசி பேட்டியளித்தார்.

இந்நிலையில் இயக்குனர் சேரன் விஷாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதன் சுருக்கமானது,

என்ன ஆச்சு

என்ன ஆச்சு உங்களுக்கு, நல்லாத்தான இருந்தீங்க.. என்ன பேசுறோம், என்ன செய்றோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப் போனீங்களே ஏன்? நீங்க பேசுறதயெல்லாம் மீட்யாக்கள் காட்றாங்கனு என்னமோ நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனா நினைச்சுக்கிட்டு பேசுற பேச்சு, செய்ற செயல் எல்லாரையும் எப்படியெல்லாம் காயப்படுத்துதுனு தெரியுமா?

டப்பாங்குத்து

மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டாப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. இது புகழ் போதைன்னு கூட சொல்ல முடியாது. ஒரு வகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

ஆசை

இப்போ தயாரிப்பாளர் சங்க தேர்தல்ல போட்டியிடுறீங்க.. அதுவும் தலைவர்னு சொல்றீங்க… ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை..

அதிகபிரசங்கி

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கல..ஏற்கனவே இருந்த பிளான ஆரம்பிச்சிருந்தா கூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும். இந்த இயலாமைக்கு காரணம் என்னனு தெரியுமா? உங்களோட அதிக பிரசங்கித்தனமான பேச்சு தான்.

தம்பி

தம்பி… இங்க இருக்குறவங்க.. தமிழக வாக்காளர்கள் இல்லை.. உங்க பணத்த வாங்கிக்கிட்டு ஓட்டு போட்ட நாடக நடிகர்கள், ஜூனியர் ஆர்டிஸ்டுகள் இல்லை…அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள்…

கைதட்டல்

உங்க படத்தோட ஓபனிங் ஷோல உங்களுக்கு கை தட்டக்கூட ஆள் இல்ல, ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு? எவ்வளவு பேசுறீங்க.. அதை நியாயமா வாங்கிருந்தா உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க?

தயாரிப்பாளர்

உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன? அட்லீஸ்ட் இப்ப அவரு என்ன செய்றாருன்னு நினைத்ததுண்டா? அவருக்கு நீங்க செட்டில் பண்றதா சொன்ன 45 லட்சம் என்ன ஆச்சு?

திமிர், ஆணவம்

அப்புறம்.. கமல் சாருக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு பேட்டி வேற.. என்ன திமிர் உங்களுக்கு, என்ன ஆணவம். கமல் சாருக்கு நீங்க யாருங்க? விஸ்வரூபம் திரைப்பட பிரச்சனை அப்போ நீங்கல்லாம் எங்க இருந்தீங்க…அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா?

கஷ்டம்

அப்புறம்.. நான் ஏதோ கஷ்டப்படுறேன்..படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க.. உங்க படத்துல நீங்க பண்ற காமெடிய விட இதுக்கு தான் ரொம்ப சிரிப்பு வருது…பொருளாதார ரீதியா எனக்கு கஷ்டம் தான், இல்லனு சொல்லல.. ஆனா அது என் வாழ்க்கை..அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால்.

யார் கிட்ட

யார் கிட்ட வந்து மோதுறீங்கனு தெரிஞ்சு மோதுங்க.. நான் படம் பண்றதும், பண்ணாததும் நான் தீர்மானிக்க வேண்டியது. ஒரு வேலைய தொடங்கிட்டு அப்படியே அதை பாதியில் போட்டுட்டு வேற வேலய பாக்குற பழக்கம் எனக்கு இல்லை..

விஜய் சேதுபதி

ஒரு விஷயம் தெரியுமா? இப்ப நான் படம் பண்ண போறேன்..என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும் சார்.. நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க..கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார்.. நாம பண்ணலாம் சார் அப்டின்னு ஒரு நடிகர் சொன்னாரு பாத்தீங்களா? அது தான் மனிதாபிமானம்.. உதவி, மாற்று வழி…அந்த மனிதன் தான் விஜய் சேதுபதி…அவர் தான் சரியான மனுஷன்…

tamil.filmibeat.com