தேசத்தில் தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், நாட்டில் தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். அரசியல் அநீதிகளுக்கு ஏதிராக குரல் கொடுப்பேன் என கூறிய அவர், எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவை படுகிறார்கள் என்றார்.
அரசியல் வர்த்தகமாகிவிட்டது. காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது எனது முதல் தகுதி என்றார்.
மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என கூறிய கமல் ஹாசன், எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது; காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர் என்றார். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியல் நடத்தவில்லை என குறிப்பிட்ட்டார்.
கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும் என கூறிய கமல் ஹாசன், மக்களுக்கு தேவையான அரசியலே தேவை என்றார். அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெருத்ததாகவும் கமல் தெரிவித்தார்.
-http://news.lankasri.com