நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவித்தார். அவருடன் விஷால் மற்றும் பாண்டிராஜ் ஆகியோர் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க தொடங்கினர், “ஒரு நடிகன் வந்திருக்கேன்னதும் இப்ப இவ்ளோ பேரு வர்ரீங்களே 11 நாளா போராடுனாங்களே அப்ப எங்க போனீங்க” என கேட்டார். “தமிழ் மீடியாக்களை அல்ல, நான் சொல்வது நேஷ்னல் மீடியாவை” என பின்னர் விளக்கமளித்தார்.
விவசாயிகள் பிரச்சனையை மாநில பிரச்சனையாக பிரித்து பார்க்காமல், தேசிய பிரச்சனையாக கருதி ஒரு நிரந்தர தீர்வு தரவேண்டும் என அரசையும் அவர் கேட்டுக்கொண்டார்.
-http://www.cineulagam.com
நடிகர் சங்க தேர்தல் ஏதும் வரவிருக்கிறதா ?
தமிழ் நடிகன் எவனும் பேச மாடடான்,
ஒன்றும் நடக்காது– தினசரி அங்கு நடக்கும் அநியாயங்களுக்கு அளவே இல்லை– குஜராத்தில் 13 மாணவியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய 7 ஆசிரியர்களை ஒன்றும் செய்யவில்லை– ஆனால் அங்குள்ள மட ஈன கல்வி அமைச்சர் அந்த மாணவியை தரக்குறைவாக பேசி உள்ளான். அங்குள்ள அரசியல் வாதிகள் மிகவும் திமிருடன் அகங்காரத்துடன் செயல் படும் ஈனங்கள்
*வயது
சரியான சவுக்கடி!! ஊடகம் என்ற பெயரில் இழிவியாபாரம் செய்யும் கேவலமானவர்கள் இவர்கள். இந்த ஈனப்பிறவிகளின் இழிசெயலுக்கு ஒரு உதாரணம், சன்டிவியின் செய்தியில் ஒரு காட்சி, ஏழ்மையான இளம்பெண், யாரோ ஒரு படுபாவியால் எரிதிராவகம் வீசப்பட்டு கோரமாகிவிட்ட முகத்தை முக்காடிட்டு மறைத்துக்கொண்டு தன் சகோதரியுடன் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே காத்து நிற்கிறாள். அவளை இந்த ஊடகக் கோமாளிகள் ஒட்டுமொத்தமாய் முற்றுகையிட்டு அவளின் சிதைந்த முகத்தை படமெடுக்க அத்தனைப் பிரயத்தனப்படுகிறார்கள், பேட்டி என்ற பெயரில் தன் சகோதரியின் பின்னால் மறைய முயலும் அவள் முகத்தை இடிப்பதுபோல் மைக்குகளை அவள் முகத்துக்கு நேரே நீட்டி, அவர்களை தவிர்க்க தவித்துக்கொன்டிருந்த அந்தப் பெண்ணை பார்க்க நமக்கே அடச்சே என்றாகிவிட்டது, அந்தப் பெண்ணுக்கு எத்தனை வேதனையாயிருந்திருக்கும் ? இந்தப்பாவிகளை அவ்வப்போது இப்படி யாராவது காரித்துப்பித்தான் ஆகவேண்டும் , முடிந்தால் அதை நாம் வரவேற்று பாராட்டுவோம், இல்லையெனில் இப்படித்தட்டிகேட்பவர்களை தூற்றுவதையாவது தவிர்ப்போம்.
‘புனிதப் போர்’ நடந்த புண்ணிய பூமியில் காலடி வைப்பது என் பாக்கியம் என்று சொன்னவன் ஏன் ‘கம்’ முன்னு இருக்கிறான். தமிழன் பணத்தில் அன்றாடம் சோறு தின்னும் அந்த இழிபிறப்பு பிராணி இன்னும் வாழ்ந்தென்ன..அவனை விட பிரகாஷ்ராஜின் மனிதநேயப் ‘பற்று’ கௌரவமானது, வாழ்க பிரகாஷ்ராஜ் .