திருநங்கைகளுக்காக நான் மறுபடியும் மறுபடியும் படம் எடுப்பேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று சர்வதேச திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக நேற்று நெல்லையில் மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
இதில், நாலுமாவடி மோகன், திருநங்கைகள் கங்கா நாயக், சீமா நாயக் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், அன்புராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்ச்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய லாரன்ஸ் கூறுகையில், என்னுடைய முதல் நண்பரான என் அம்மாவின் வழிகாட்டுதலின் படி திருநங்கைகளுக்காக நான் காஞ்சனா படத்தில் நடித்தேன். திருநங்கைகளாக பிறப்பது சாபம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. திருநங்கைகளும் நம்மை போன்றவர்கள் தான்.
ஒரு திருநங்கையை மற்றொரு திருநங்கை தத்தெடுப்பது பாராட்டுக்குரியது.
டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் குழந்தை பிறந்தோலோ, வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்தாலோ, எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றாலும் திருநங்கைகளை அழைத்து தான் விளக்கேற்றி வைக்கச் சொல்வார்கள். அந்த ஒரு நிலை தமிழகத்திற்கு வரவேண்டும்.
இவர்களுக்காக, படங்களின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமித்து வங்கி கணக்கு தொடங்கி சேமித்த பணத்தை அதில் போட்டு வைப்பேன். அதனை திருநங்கைகளின் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்துவேன். மேலும், அவர்களுக்கு ஒரு கட்டிடம் கட்டிக்கொடுப்பேன் என்று பேசியுள்ளார்.
– manithan.com