விவேக்கை பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்- காரணம் என்ன தெரியுமா?

vivek_001முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாம் அவர்களின் பெயரில் பசுமை கலாம் என்ற திட்டத்தின் பெயரில் நடிகர் விவேக் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

ஒருகோடி மரக்கன்றுகள் என்று முடிவு செய்திருக்கும் விவேக் இதுவரை அவர் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

இவரின் இந்த சேவையை பாராட்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து இருவரும் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

-cineulagam.com