குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக்கூடாது… இதுதான் சத்யராஜ் மன்னிப்பு கேட்க்கும் பாணி !

sathyarajசென்னை: 9 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட மக்களுக்கு எதிராகப் பேசியதற்காக ஒருவழியாக இன்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார் சத்யராஜ்.

ஆனால் அவர் மன்னிப்புக் கேட்டிருக்கும் விதம், ‘பாகுபலி 2 படத்துக்காக வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்கிறேன். இந்தப் படம் ரிலீசானாப் போதும்… அதுக்கப்புறமும் தொடர்ந்து தமிழர் – கன்னடப் பிரச்சினை வரும்போது மேலும் தாக்கிப் பேசுவேன்,’ என்ற தொணியில்தான் அமைந்திருக்கிறது.

இது இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமா அல்லது எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றியது போலாகுமா என்பது இன்றும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும். சிம்பிளாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் அல்லது மன்னிப்புக் கோருகிறேன் என்றால், தமிழர்கள் வெளுத்து எடுப்பார்களே என்பதை மனதில் கொண்டு, தனது அறிக்கையை வாசிக்கும்போது ஒருவித நக்கலுடன்தான் வாசித்துள்ளார் சத்யராஜ்.

அதாவது மன்னிப்புக் கேட்ட மாதிரியும் இருக்கணும்… தமிழர்கள் மத்தியில் ஹீரோ மாதிரியும் தெரியணும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்கப்பட்ட மன்னிப்பு அறிக்கை இது.

“எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும், என் நலம் விரும்புபவர்களுக்கும் என்மீது வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயம் ஆவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமில்லாது, கர்நாடகா மாநிலத்திற்கு ‘பாகுபலி-2’ ஆம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…” – இது சத்யராஜ் மன்னிப்பு அறிக்கையின் ஒரு பகுதி.

தான் நடித்த ஒரு படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகவே மன்னிப்பு கேட்டுள்ளார். இதில் தமிழ், தமிழன், வீரம், உரிமை… என எந்த வெங்காயமும் இல்லை. எல்லாமே காணாமல் போய்விடுகிறது.

ஆக, ஒரு படம் வெளியாக வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக அவர் கேட்டுள்ள மன்னிப்பு இது. இதை கன்னட வட்டாள் நாகராஜ் ஏற்பாரா? அல்லது எதிர்ப்பு தொடருமா… பார்க்கலாம்.

tamil.filmibeat.com

சத்யராஜை வாட்டாள் நாகராஜ் எதிர்க்க காரணம் ரஜினி.. பிரபல இயக்குநர் புது குண்டு

sathyaraj43555சென்னை: ரஜினிகாந்த்துக்கு எதிராக சத்யராஜ் பேசியததுதான் அவருக்கு வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்று, திரைப்பட இயக்குநர் கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.

கவிதா பாரதி தனது முகநூலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: சத்யராஜ் எந்த ஓட்டரசியல் கட்சியோடும் தன்னை இணைத்துக் கொண்டு அதன் மூலம் எம்.எல்.ஏ.,அல்லது எம்.பியாக விரும்பியவரன்று.. மாறாக பெரியார் பற்றாளனாகத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்..

ஈழ ஆதரவுப் போராட்டங்களிலும், காவிரி நதி உரிமைப் போராட்டங்களிலும் உண்மையான உணர்வோடு பங்கேற்றவர்.. தமிழர் உரிமைக்காக குரல் கொடுப்பவை என்று அவர் நம்பும் இயக்கங்களுக்கு விளம்பரமில்லாமல் அவர் செய்த உதவிகள் ஏராளம்..

பெருந்தன்மையான மன்னர்

ஈரோடு வட்டாரத்தை செழிப்பாக்கி முப்போகமும் பாயும் காளிங்கராயன் கால்வாய் காளிங்கராயன் என்னும் சிற்றரசன் வெட்டியதாகும்.. தனது சொந்த நிலத்தின் ஆதாயத்திற்காகவே இந்தக் கால்வாயை அரசன் வெட்டுகிறான் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.. கால்வாயைத் திறந்துவிட்டு நானோ, என் குடும்பமோ, இனி வரும் என் சந்ததியினரோ அள்ளிக்குடிக்க்கூட இந்த வாய்க்காலில் ஒரு கை நீரை எடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு கோயமுத்தூர் பகுதிக்குக் குடி பெயர்ந்தான் காளிங்கராயன்..

தலித் தலைமை கேட்டார்

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் காளிங்கராயன் கால்வாய்க்கான ஒரு விழாவுக்கு சத்யராஜை அழைத்தனர்.. ஒரு தலித் தலைமையில் அந்த விழா நடக்குமானால் நான் வருகிறேன் என்று சொன்னவர் சத்யராஜ். .

ரஜினியை விமர்சித்தார்

அப்படிப்பட்டவர் காவிரி நதி நீர் உரிமைக்கான ஒரு கூட்டத்தில் ரஜனிகாந்தை விமர்சனம் செய்து பேசினார். . அதில் அவருக்கு சொந்த லாபம் எதுவுமில்லை.. பல ஆண்டுகளுக்கு முன் பேசிய வார்த்தை ரஜினிகாந்த் மனதை புண்படுத்திவிட்டது.. எனவே அந்த வார்த்தைகளுக்காக சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வட்டாள் நாகராஜ் கூறுகிறார்.. ரஜினிகாந்துக்கு எப்போதும் வட்டாள்கள் இருக்கிறார்கள்.. கூடவே நம்மாட்களும் இருக்கிறார்கள்..

ரஜினிக்காக எதிர்ப்பு

நியாயமாக இது நம் தன்மானப்பிரச்னை என நாம் சத்யராஜ் பக்கம் நிற்க வேண்டும், அவரைத் தனிமைப் படுத்திவிடக்கூடாது.. நடிகனாகச் சாவதைவிடவும் தமிழகனாகச் சாகவே விரும்புகிறேன் எனறு சொல்லிவிட்டு தன் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறார அவர்.. தான் நடித்த படத்தை சிக்கலுக்குள்ளாக்காத பெருந்தன்மை ஒருபோதும் அவரது கெளவரக்குறைவாகாது. ரஜினிகாந்துக்கு எதிராகப் பேசினால்… என்னும் எச்சரிக்கை சத்யராஜுக்கு எதிரானதல்ல.. நமக்கு எதிரானது.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாகராஜ் எதிர்ப்புக்கு காரணம்

ஆனால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்தது 9 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பேச்சுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் குசேலன் திரைப்படம் வெளியானபோது, ரஜினி பேசிய ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியது வாட்டாள் கோஷ்டிதான். “பெரிய படங்கள் வெளியாகும்போது இவ்வாறு இவர்கள் மிரட்டுவதன் பின்னணியில் லாப நோக்கம் ஒழிந்துள்ளது” என்கிறார் நடிகர் மயில்சாமி.

tamil.oneindia.com