சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் வரிகள்.. பெண் போலீஸ் அதிகாரிகள் கண்டனம்

police_womenகோவை: சமீபகாலமாக பெண்கள் இழிவுபடுத்தப்படுவதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றது என்று தமிழகத்தை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபகாலமாக திரைப்படங்களில் பெண்களை இழுபடுத்தும் காட்சிகள், வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்று வருவதாக பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த 3 பெண் போலீஸ் அதிகாரிகள் கோவை டி.சி.பி லட்சுமி ஐ.பி.எஸ். கூறுகையில், இந்தியாவில் பெண்களை போற்றி பெருமையாக பார்க்கின்றது நம்முடைய நாடு. அதனால்தான் நதிகளுக்கு கூட பெண்களின் பெயர்களை வைத்துள்ளோம். ஆனால் தற்போது பெரியார் கூறியது போல், பெண் போகப் பொருளாகவும் திருமணத்திற்கு நகை வாங்க பயன்படுத்தும் பொருளாக பலர் கருதுகின்றனர்.

அப்படி இருப்பதனால் பெண்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமா என்று தான் கூறவேண்டும்.

இளைஞர்கள் மத்தியில் பெண்கள் தொடர்பான அவதூறுகளை சினிமா மூலமாக பரப்புகின்றனர். பெண்களை இழுவுபடுத்தும் பாடல்கள், வன்முறையை தூண்டும் வகையிலான பாடல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன.

பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலும் தாய், மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து எழுத வேண்டும். அவர்கள் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 12 குற்றச்சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இழிவான பாடல்கள், வசனங்கள் தான் முக்கிய காரணம். இதற்கு சினிமாவின் பங்கு தான் அதிகம் என்கிறார் கோவை எஸ்.பி., ரம்யா பாரதி.

டி.எஸ்.பி., திஷா மிட்டல் கூறுகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல் வரிகள், திரைப்படங்களில் வரும் உரையாடல்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.

இவர்கள் மூன்று பேரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களில் ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்களை இழுவுபடுத்தும் வசனங்கள், உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

tamil.oneindia.com