இன்று இந்திய சினிமாவே மறக்க முடியாத நாள்- பாகுபலி-2 அடையும் மைல் கல்

bahubali2இந்திய சினிமா தொடங்கி 100 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இன்று வரை லட்ச்சக்கணக்கான படங்கள் திரைக்கு வந்துள்ளது.

இதில் ஒரு சில படங்களே காலம் கடந்தும் பாராட்டப்படும், அப்படித்தான் பாகுபலி இந்திய சினிமாவின் மைல் கல்லாக அமைந்துவிட்டது.

இப்படத்தின் வசூல் என்பது இந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் உள்ளது, இப்படம் இன்றுடன் ரூ 1000 கோடியை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அந்த வகையில் இந்திய சினிமாவின் முதல் ரூ 1000 கோடி படம் என்ற பெருமையை பாகுபலி-2 பெறவுள்ளது.

நேற்று வரை இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 745 கோடி, வெளிநாடுகளில் ரூ 180 கோடி என மொத்தம் ரூ 925 கோடி வசூல் செய்துள்ளது.

-cineulagam.com