எய்தவன் திரை விமர்சனம்

yeidhavanஅதே கண்கள் படத்தின் மூலம் சோலோ ஹீரோவாக வெற்றிக்கொடுத்தவர் கலையரசன். மீண்டும் சோலோ ஹீரோவாக சக்தி ராஜசேகருடன் கலையரசன் கைக்கோர்த்துள்ள படம் தான் எய்தவன். கலையரசன் இந்த முறையும் டார்க்கெட்டில் சரியாக எய்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

கலையரசன் சென்னையில் தனக்கென ஒரு சொந்த பிஸினஸ் பார்த்துக்கொண்டு, அழகான குடும்பம் சாய்னாவுடன் அழகான காதல் என வாழ்ந்து வருகின்றார். கலையரசனின் தங்கை மருத்துவர் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றார்.

கவுன்ஸிலிங் செல்லும் இடத்தில் அரசு கல்லூரியில் சீட் கிடைக்காததால், தனியார் கல்லூரிக்கு முயற்சிக்கின்றனர். அங்கு டொனேஷன் மட்டுமே ரூ 50 லட்சம் கேட்க, எப்படியோ கலையரசன் பணத்தை ரெடி செய்து கொடுக்கின்றார்.

ஆனால், கல்லூரிக்கு தன் தங்கை சென்ற பிறகு தான் தெரிகின்றது, அந்த கல்லூரியின் லைசன்ஸ் நீக்கப்பட்டது என்று. தான் ஏமாந்த பணத்தை கேட்க செல்லும் இடத்தில் கலையரசன் பல அசம்பாவிதங்களை சந்திக்கின்றார்.

அதை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி மல்டி மில்லினியர் மற்றும் கல்லூரி நிர்வாக உரிமையாளர் கௌதமை எப்படி எதிர்க்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கலையரசன் அட்டக்கத்தியில் கவனம் ஈர்த்து, கபாலியில் அனைவரின் மனதில் பதிந்து, அதே கண்களில் தன்னை ஒரு நாயகனாக நிரூபித்து, அடுத்தடுத்து தரமான படங்களை நோக்கி பயணிக்கின்றார். ரஞ்சித் பட்டறை என்பதாலேயே எந்த ஒரு கதைகளிலும் மிகவும் யதார்த்தமாக பொருந்தி செல்கின்றார். தங்கையின் சீட்டிற்கு போராடுவதிலும் சரி, பெரிய வர்த்தக நிறுவனத்தை எதிர்க்கும் இடத்திலும் சரி கதையின் நாயகனாக கலக்கியுள்ளார்.

சாய்னா பிச்சைக்காரனுக்கு பிறகு நடித்து வெளிவந்துள்ள படம். போலிஸாக வருகின்றார், ஏதோ செய்யப்போகிறார், ஹீரோவிற்கு பெரிய உதவி செய்வார் என எதிர்ப்பார்க்க, அங்கங்கே கலையரசன் போலிஸில் மாட்டும் போது காப்பாற்றிவிட்டு செல்கின்றார், பெரிதும் ஸ்கோப் இல்லை.

ஆனால், லோக்கல் ரவுடியாக நடித்திருக்கும் தர்மன், கல்லூரி நிர்வாக உரிமையாளராக வரும் கௌதம் இருவரும் கவனம் ஈர்க்கின்றனர். அதிலும் தர்மன் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வான், அதை கிளைமேக்ஸ் காட்சியில் கூட திருந்தாமல் காட்டியிருப்பது கனகச்சிதம். கௌதம் ஹைகிளாஸ் இளைஞரை அப்படியே கண்முன் நிறுத்துக்கின்றார். டப்பிங் கொஞ்சம் செட் ஆகவில்லை.

தற்போது NEET தேர்வால் மாணவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்க, இந்த நேரத்தில் ஒரு மருத்துவ கல்லூரி குறித்த படம் என்பதால் நல்ல கவனம் ஈர்க்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான காட்சியமைப்புகள் தான் 90-ல் வந்த அர்ஜுன் படம் போல் உள்ளது.

படத்திலேயே செல்லாத ரூ 500 நோட்டுக்களை தான் காட்டுகிறார்கள், அதிலே தெரிந்திருக்கும் படம் எப்போது எடுத்தது என்று, பார்த்தவ் பார்கவ் இசையில் பாடல்கள் எதுமே கவனம் ஈர்க்கவில்லை, பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.

சமுதாயத்திற்கு குறிப்பாக மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான காட்சியமைப்புக்கள்.

மாணவர்களை கௌதம் கொல்ல சொல்லும் இடத்தில், கலையரசன் அதை முறியடிக்க போடும் திட்டம் ரசிக்க வைக்கின்றது.

-cineulagam.com