இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எத்தனை தோல்வியை சந்தித்தாலும் இவரின் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறைவதில்லை.
இவர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அப்போது பேசிய அவர் சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்றார்.
இதற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தாலும் வழக்கம்போல தமிழர் அல்லாத ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும், மீ்ண்டும் மீண்டும் ஒரு நடிகரே நாட்டை ஆள வேண்டுமா போன்ற விமர்சனங்களை இளைஞர்கள் தரப்பில் கோபத்துடன் சமூகவலைதளங்களில் புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர்.
-cineulagam.com
மீண்டும் தமிழனல்லாத நடிகன்தான் வேண்டுமா. நடிப்பு ஒன்று நிஜ வாழ்க்கை வேறு. நடிப்பதில் சிறந்தவர் நம்மை நடித்தே ஏமாற்றிவிடுவார்கள். தமிழரை மீண்டும் மீண்டும் நடித்து ஏமாற்றாதீர். தமிழ்நாடு தமிழர்களே கவனம் கவனம். எனக்கு ரஜினியின் மீது எவ்வித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
இது அக்கரைச் சீமை அரசியல் விவகாரம், எனவே கருத்து பதிவிடலாமா என்று யோசிக்கும் அதே வேளை நாநும் ஒரு தமிழன் என்று எண்ணும்போது கருத்து சொல்வதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது.
தற்போது ‘கலங்கி’யிருக்கும் தமிழக அரசியல் குட்டையில் (சாக்கடையில்) ஆதாய மீன் பிடிக்கப்பார்க்கிறார் ரஜினி.
1. அவரின் புதுப் படங்கள் வெளியாகும் போது இப்படி அறிவிப்பு செய்வதும் பிறகு அந்தர் பல்டி அடிப்பதும் வழக்கமான இவரின் தமிழ் சினிமா ஸ்டைல் ஸ்டண்டுதான்.
2. அப்படியே இவர் அரசியலுக்கு வந்தாலும் காலம் போன காலத்தில் ‘மூலம்’ வந்த மாதிரி அவஸ்தைப் படத்தான் நேரும், காரணம் இவர் ஓர் அரசியல் பார்வையாளரே தவிர அரசியல்வாதி அல்ல, இவரின் அரசியல் ஆலோசக குரு ‘சோ’வும் இப்போது இல்லை.
3. அரசியலுக்கு வந்தால் இவர் சொன்ன மாதிரி ‘அந்த’ முதலைகள் இவரைக் கடித்துக் குதறாமல் விடாது.
4. அவ்வப்போது ஆண்டவன் சொன்னால் வருவேன் ஆண்டவன் சொன்னால் வருவேன் என்கிறாரே? அது எந்த ஆண்டவன்? இவரின் காதில் மட்டும் வந்து சொல்வானா? அல்லது இவரை அரசியலுக்கு வா வா வா என்று வாட்ஸப் மெசெஜ் அனுப்புவானா?
5. உண்மையான தெய்வ பக்தி இருந்தால் ஆண்டவன் சொன்னால் வருவேன் என்று ஆண்டவனை இங்கே இழுப்பது ஏன்? ஆண்டவனுக்கு இது தான் வேலையா? அல்லது இவர் ஆண்வடன் என்று அடிக்கடி சொல்வது வேறு யாரையாவது இருக்குமோ?
6. உண்மையிலேயே தமிழகத்தைக் ‘காப்பாற்ற’ வேண்டும் எனும் நோக்கம் இருந்தால் இளைஞர்களை அல்லவா இவர் அரசியலுக்கு வரச்சொல்லி அழைக்க வேண்டும். ஒரு வேளை இவருடனேயே இருக்கும் இவரின் இளைஞன் ‘மருமகனை’ ஆட்சியில் அமர்த்ததான் இந்த கூப்பாடா?
இப்படி எனக்குள்ளே பல கேள்விகள். ஆனாலும் இதற்கு மேல் நான் ஏதேனும் கருத்து சொன்னால் என்னைக் கடித்து குதறிவிடுவார்கள் நம்மைச் சுற்றியுள்ள சூப்பர்ஸ்டார் பக்தர்கள்.
ஒரு குடிசையில் ஒரு சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பான். “யார் வந்திருக்கா பாரு” என்று அவன் தந்தை எழுப்பிக் கொண்டிருப்பார். பக்கத்தில் ஒரு வயதானவர் (அவர்தான் அந்த வீட்டிற்கு வந்த விருந்தாளி) நின்று கொண்டிருப்பார்.
பையனின் பதில்
“போப்பா, ராஜீவ் காந்திதானே, நான் தூங்கனும்”
குடிசை வீடுகளுக்கு செல்லும் நாடகத்தை ராஜீவ் காந்தி நடத்திக் கொண்டிருந்த போது வெளி வந்த கார்ட்டூன் அது.
ரஜனிகாந்தின் அரசியல் பிரவேச வசனங்க:ளைக் கேட்கிற போது
“போப்பா, ஒவ்வொரு பட ரிலீசின் போதும் இவருக்கு இதுவே பொழப்பா போச்சு”
என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
வருவான் ஆனா வரமாட்டான் ….. https://www.youtube.com/watch?v=RujPTso96mw
அப்படியெல்லாம் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு பிராமணன் போனால் இன்னொரு பிராமணன் வரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு பிராமணர்களிடையே இருக்கத்தான் செய்யும். ஜெயலலிதா இல்லை. அதன் தொடர்ச்சி ரஜினி தானே! சொல்லிக்கொள்ளும்படியாக வேறு யாரும் இல்லையே!
அடுத்த தமிழ் நாட்டு முதல் அமைச்சர் இன்னொரு கன்னடத்தான். தமிழ் நாட்டு மக்களுக்கு என்றுமே சொந்த இனம் என்று கிடையாது. அவன் இப்போது காயை நன்றாக நகர்த்துகிறான்.
ரஜினி =அரசியல்=0