ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், நடிகர் RJ பாலாஜி தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
“ரஜினி அரசியலுக்கு வருவார் என 25 வருடங்களாக காத்திருந்தேன், இப்போ எனக்கு பொறுமை போய்விட்டது. நானும் ரஜினி ரசிகன்தான். என் மாமனாருக்கு 65 வயசாகிறது, அவர் பேரக்குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறார், அதை பார்க்கும்போது அவர் அப்படியே எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என என் மனதில் தோன்றும்.”
“அதுபோல ரஜினிகாந்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரும் சந்தோசமாக இருக்கவேண்டும் என மட்டுமே நான் விரும்புகிறேன்” என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
“அரசியலுக்கு வந்தால் அவர் கஷ்டப்படுவார் என்பதை தாண்டி, இதற்கு பிறகு வந்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்பதையும் யோசிக்க வேண்டும்” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
‘என் மனதில் பட்டதையே நான் சொன்னேன்’ என ரஜினி ரசிகர்களிடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் RJ பாலாஜி.
-cineulagam.com