தமிழகத்தில் தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது, இந்த தமிழ்நாடு மாதிரி ஒரு அற்புதமான நாடு எதுவுமே கிடையாது. வேறு எங்குமே போய் அரசியல் செய்ய முடியாது, ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம்.
எங்களுக்கும் தேசியப்பற்று உண்டு. ஆனால், எங்கள் தாய்ப்பாலுக்கு பிறகுதான் உலகப்பால். நம்மை அறியாமல் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
யார் வேண்டுமானாலும் இங்கு சங்கமிக்கலாம். ஆனால் அடையாளத்தைத் தொலைத்துவிடாதீர்கள். யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள் சாப்பிட்டு திண்ணையில் படுத்து உறங்குங்கள்.
எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
-lankasri.com
அப்பாடா ! இனிமேலாவது புத்தியோடு பொளச்சிக்கங்கடா தமிழ்நாட்டுகாரனுங்களா !!
யோவ், இனிமேலாவது தமிழ் நடிகர் நடிகைகளை மட்டும் நம்பி படம் எடு. பார்க்க நாங்கள் தயார். தமிழ்நாட்ல தமிழனே இல்லாத மாதிரி மத்த மாநிலக்காரன்களையும் காரிகளையும் ஒசந்த எடத்துல தூக்கிவிட்டுட்டு இப்ப வந்து காச் மூச்னா என்னா அர்த்தம்?
குடியானவன் சொல்லுவது சரியே! வெளிமாநிலத்தவரைக் கொண்டு வந்து அவர்களுக்கு ‘டப்பிங்’ குரல் கொடுக்க வைத்தவர் இவர் தான்! இப்போது தான் தமிழன் என்னும் உணர்வு பீறீட்டு வருகிறது!!
நல்ல தமிழனை அடையாளம் காண வேண்டும்.