நம்பியவர்களை கெடுக்கிறார்கள்: யாரை சொல்கிறார் எஸ்.பி.பி.?

திருவள்ளூர்: கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது 72வது பிறந்தநாளை தனது சொந்த ஊரான கோணேட்டம்பேட்டை கிராமத்தில் ஊர் மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தி நினைவு பரிசு அளித்தனர்.

விழாவில் அவர் பேசியதாவது,

கிராமம்

கிராமம்

72 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் பிறந்தேன். சினிமாவால் உலகப் புகழ் பெற்றேன். என் தாய் மொழியான தெலுங்கை மறுந்துவிட்டேன். தற்போது என் தாய்மொழி இசை தான்.

சுதந்திரம்

சுதந்திரம்

நான் பிறந்த இந்த கிராமத்திற்கு நான் எதுவும் செய்யவில்லை. அப்படி இருந்தும் மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை மறக்க முடியாது. நான் சினிமாவுக்கு சென்றபிறகு என் சுதந்திரம் பறிபோனது. பாடகர் ஆன பிறகு எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது.

செல்ஃபி

செல்ஃபி

தற்போது எல்லாம் ரசிகர்கள் செல்ஃபி எடுக்கிறார்கள். எனக்கு செல்ஃபி எடுப்பது பிடிக்கவில்லை. என்னை இந்த கிராமத்து மக்கள் எஸ்.பி.பி.யாக பார்க்காமல் கோணேட்டம்பேட்டை மணியாக பார்த்தாலே போதுமானது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இந்த ஊரில் உள்ள துலக்காணத்தம்மன் கோவில் குளத்தை தூர் வார உதவி தேவைப்பட்டால் நிச்சயம் செய்வேன் என்றார் எஸ்.பி.பி.

-http://tamil.filmibeat.com