நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் கனவில் கூட வந்துவிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழகத்தின் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில். தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி, விஷாலாக இருந்தாலும் சரி கனவில் கூட உங்களுக்கு சிந்தனை வந்துவிடக்கூடாது.
அப்படி நடைபெற்றால் மானத்தமிழன், மராட்டியன் என தமிழ்நாட்டில் சண்டை நடைபெறும் சூழ்நிலை ஏற்படும்.
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜனதா ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நெருக்கடிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார்.
-lankasri.com
தமிழ் நாட்டை ஆள தமிழனுக்கு தகுதியும் , நேர்மையும் , அறிவும் இல்லாத போது , மற்றவன் ஆள நினைக்கிறன் ! ஆங்கிலேயன் ஆண்ட அடிமை தனத்திலிருந்து தமிழ் நாட்டு காரன் இன்னும் மாற வில்லையே! தமிழன் ,தமிழ் என்று மேடையில் வேர்வை வழிய கத்துவதை தவிர உன்னை போன்ற வனுக்கு வேறு என்ன தெரியும் ! உங்கள் தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆங்கில மோகம் ! குடிகார கும்பல் ! கூத்தாடிகள் பட்டாளம் !
இருந்து விட்டு போகட்டும்……… ஆனால் தமிழன்தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்ற உணர்வு தமிழ்நாட்டுக்காரன் ஒவ்வொருவருக்கம் வரவேண்டும் . தமிழரில்லாத நீ மூடிக்கொண்டு உன் வேலையை பார் .
நல்ல மனிட்ன் யார் ஆண்டாளும் சரி மக்கள் வாழ வேண்டும் ..பசி ..பட்னி..பஞ்சம் இல்லாமல் அடு போதும்…….விவசாய்கள் …மீனவர்கள் நலம் காப்பவன் எவனாக இருந்தாலும் ஆளட்டும் …இங்கே தேவை நல்ல மனிதன்….. மொழியை வைத்து அல்ல