இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் எளிமையில் இருந்து உழைத்து இன்று வெற்றி சிகரத்தில் நிற்கிறார். பல சாதனைகளை செய்த அவருக்கு கிடைத்த பரிசு தான் ஆஸ்கர் விருது என்னும் உயரிய சாதனை. அதுவும் உலக சாதனை.
தமிழகத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக், கலாம் சாட் என 64 கிராம் கொண்ட மிகச்சிறிய செயற்கை கோளை கண்டுபிடித்தார். இது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனால் ரிஃப்த் ஷாருக்கிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தமிழக அரசு அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்தது. இந்நிலையில் அவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதற்கு ரிஃபாத் உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி, எங்கள் டீம் முழுவதுமே உங்கள் ரசிகர்கள் தான், நாங்கள் உங்கள் இசையை கேட்டுத்தான் பாசிட்டிவ் எண்ணங்களை பெற்றோம் என்று கூறியுள்ளார்.
இசை மருத்துவத்துறையிலும் பயன்படுத்தப்படும் இக்காலத்தில், ரஹ்மானின் இசை ரிஃபாத்துக்கு உற்சாகத்தை கொடுத்து ஊக்கப்படுத்திதோடு அவரை போலவே சாதிக்கவும் வைத்திருக்கிறது.
-cineulagam.com
வாழ்த்துகள்.தொடர்ந்து சாதனை படைக்க என் வாழ்த்துகள்.