தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு- சித்தார்த் அதிரடி

tamil cinemaஇன்றிலிருந்து ஜிஎஸ்டி வரி அமலாகியிருக்கிறது என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் தமிழக அரசு நகராட்சி வரி 30% உண்டு என்று அறிவித்துள்ளது.

இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக வரும் திங்கட்கிழமை (ஜுலை 3) முதல் திரையரங்குகளை மூட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தமிழக அரசை கண்டித்து டுவிட் செய்துள்ளார். அதில் அவர், தமிழ் சினிமா துறையை ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு தண்டித்து இருக்கிறது. யு சான்றிதழ் வழங்குவதற்கும், வரி விலக்கு வழங்குவதற்கும் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. இவைபோதாது என்று தற்போது 30% உடன் ஜிஎஸ்டி வேறா?

இப்போது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய குழப்பங்களில் நம்மை வைத்து விளையாடுகிறார்கள்.

ஜிஎஸ்டி என்பது ஒரே தேசம் ஒரே வரி, இதில் விதிவிலக்கு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.

-cineulagam.com