நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார், அப்போது அரசியல் குறித்து சில கருத்துக்களை முன் வைத்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தின் பாளையங்கோட்டையில் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவரும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசினார்.
ஆனால் அவர் என் பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார் என்று கிண்டலாக கூறினார்.
மேலும் ரஜினி தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும், தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அவர் கோழைத்தனம் கொண்டவர் என்று கூறினார்.
-lankasri.com
நடிகர் ரஜினிகாந்தாய் அரசியலுக்கு கொண்டுவருவது குடுத்தாடிக்கு ராஜா வேஷம் பொடுவதாகும்.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? வரும்போது வரட்டும் – விருப்பம் இருந்தால் வாக்களிக்கவும் இல்லாவிடில் வாக்களிக்க வேண்டாமே? இதற்க்கு ஏன் இவ்வளவு ஊ ஹா?
ரஜினி ரொம்ப நல்லவர் , தமிழர்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளார், அரசியலுக்கு வந்தால் தமிழ் நாடு உருப்படும்.
முட்டாள்களை அரசியல்வாதிகளாக கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.