ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் புதிய உத்தரவு: கடுப்பில் தமிழக அரசு

kamal-hassanலஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை அதற்கான தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்க வேண்டும் என கூறினார்கள்.

இதையடுத்து அமைச்சர்களின் இணையதள முகவரியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கமல் ரசிகர்களும், மக்களும் அந்த முகவரிக்கு ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு ரசிகர்கள் தயாரான போது அரசின் அதிகாரபூர்வ இணையதள முகவரிகள் அனைத்தும் திடீரென மாயமாகி போனது.

இதையடுத்து கமல்ஹாசன் நேற்று தனது ரசிகர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், அமைச்சர்களின் இணையதள முகவரிக்கு பதிலாக ஊழல் புகார் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

அத்துடன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் முகவரி, இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

-lankasri.com