தமிழக அரசை எதிர்க்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, எம்ஜிஆர் நாளிதழ் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில், அரசை எதிர்த்து ஆர்வக் கோளாறு காரணமாக கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் தனக்குப் பின்னால் இருப்பதாக கமல் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
உணர்ச்சிவசப்பட்டு அவர் செய்கின்ற செயல்களும், சொல்கின்ற கருத்துகளும் இப்போதைக்கு விளம்பரத்தை ஏற்படுத்தும் என்றாலும், பின்னால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது கமலுக்கு புரியவில்லை என்றும் நமது எம்ஜிஆர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கமலுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்சிகள் காலப்போக்கில் கைகழுவி விட்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை கமல்ஹாசன் உணர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-lankasri.com


























உங்களின் எச்சரிக்கையை செய்லபடுத்துங்கள். அப்போது தானே உங்களின் பலம் எங்களுக்கும் தெரியும்!
யாரும் யாருக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கமல் கூறும் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு பொய்ப்பிக்க வேண்டியது அரசின் கடமை. மற்றபடி அவர்கள் அதைச் செய்யத் தவறினால் மக்கள் அவர் பக்கம் இருக்கும் பட்சத்தில் அவர் அரசியலில் புகுந்து தலையேற்பதில் என்ன தவறு. அவர் தமிழர் தானே. அவ்வப்போது குரல் கொடுக்கும் ரஜினியை விட எப்போதும் அரசியல் பேசும் கமல் தேவலை.