சென்னை: மத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோ பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் கூறினார்.
சென்னையில் நேற்று விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு முழுத் தடை விதிக்கிறது. இணையத்தில் அந்தத் தளங்கள் நிரந்தரமாக முடக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது, திருட்டுதனமாக படங்களை வெளியிடும் தளங்களையும் நிச்சயம் தடுக்க முடியும்.
நமது மத்திய அரசு நினைத்தால் ஒரே வருடம் அல்லது ஆறு மாதத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவதைத் தடுக்க முடியும். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும். இதுகுறித்து அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்றார்.