சினிமா, ஒரு கலை என்பதைத் தாண்டி,ஒரு கொண்டாட்டமாக, மிகப்பெரிய வணிகமாக மாறுவதில், முக்கியமாக தமிழ்நாட்டில், நாயகர்களின் பங்கு மறுக்க முடியாதது. ஒரு புகழ் பெற்ற ஹீரோவின் படம் வெளியாகும் பொழுது நிகழும் வணிகமும் கொண்டாட்டமும் பெரிது. படம், வசூலிக்க வேண்டிய தொகையில் பெரும் பகுதியை முதல் மூன்று, நான்கு நாட்களிலேயே வசூலித்து விடும். அந்த ஹீரோவின் ரசிகர்கள் தரும் கொடை அது. அதனால் தான், பெரிய ஹீரோக்களின் படங்கள், பெரும்பாலும் அவர்களின் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்படுகின்றன. ஆனால், ஒரு திரைப்படம் முழுமையான வெற்றியைப் பெற அந்த ஹீரோவின் ரசிகர்கள் மட்டுமே பார்த்தால் போதுமா என்பது கேள்விக்குறி.
திரையுலகில் நடிகர் அஜித்குமாரின் இருபத்தி ஐந்தாம் ஆண்டில் வந்திருக்கும் திரைப்படம் ‘விவேகம்’. AK என்கிற அஜய் குமாரான அஜித்தின் மனைவி யாழினியாக காஜல் அகர்வால், விவேக் ஆனந்த் ஓபராய், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படத்தை ‘வீரம்’, ‘வேதாளம்’ வெற்றிக் கூட்டணியின் விளைவாக இயக்கியிருக்கிறார் சிவா. சர்வதேச தீவிரவாதத் தடுப்புக் குழுவின் அங்கமாக செர்பியாவிலிருந்து செயல்படுகிறார் அஜித். இவரது குழுவில் விவேக் ஓபராய் உள்ளிட்ட நான்கு பேர் இருக்கின்றனர். தீவிரவாதிகளால், சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் இந்தியாவில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு செயற்கை நிலநடுக்கத்தை உருவாக்கி மக்களைக் கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது. இதைத் தடுக்கும் பொறுப்பு அஜித் அண்ட் டீம்மிற்கு. இடையில் துரோகத்தின் வலி, காதலின் பலம், எல்லாம் சேர்த்து, தமிழில் அதிகம் செய்யப்படாத வகையில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தைத் தர முயன்றிருக்கிறார் சிவா.
‘வேதாள’த்தில் விமர்சிக்கப்பட்ட உடலைக் குறைத்து, இன்னும் ஹேண்ட்சம்மாக, இன்னும் அதிக பக்குவமாக, இன்னும் சிறப்பான உடைகள் அணிந்து, இன்னும் கடினமான சண்டைக் காட்சிகள் எல்லாம் நடித்து, இன்னும் தன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த முயன்று, அதில் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அஜித். கதைக்கென எதையும் செய்யத்தயாராய் இருந்திருக்கிறார் என்பது படத்தில் வெளிப்படையாக தெரிகிறது. காஜல் அகர்வாலுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. டூயட்டுக்கென மட்டுமில்லாமல் இறுதிக் காட்சி வரை உறுதியுடன் உடனிருக்கும் கதாபாத்திரம். சிறப்பாக நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் சிறிது நேரமே வந்தாலும் ‘நடாஷா’வாக கவர்கிறார். கருணாகரனின் இருப்பு, முதல் பாதிக்கு சற்று நகைச்சுவையை சேர்த்திருக்கிறது. இதுவரை தமிழ் படங்களில் காட்டப்படாத நாடு, இடங்கள், நொடிக்கு பல ஃப்ரேம்கள் மாறி விறுவிறுப்பையும் பிரம்மாண்டத்தையும் காட்டும் கேமரா, உலக அரசியல் பற்றி ஒரு துளி என படம் எடுக்க நினைத்த சிவாவுக்கு வாழ்த்துகள். அதே நேரம் படத்தின் உருவாக்கத்தில் காட்டிய கவனம், கொட்டிய உழைப்பு, எழுத்தில் குறைந்திருக்கிறது. வெற்றியின் கேமராவும் ரூபனின் படத்தொகுப்பும் இணைந்து பல காட்சி விருந்துகளை வைக்கின்றன.அனிருத்தின் இசையில் பாடல்கள் மிகச்சசிறப்பு. பின்னணி இசையை ஆங்காங்கே குறைத்திருக்கலாம்.
ஒரு பெரிய நாயகன் எதிர்கொள்ளும் வில்லன்களும் பலமாக இருந்து, அவனை எதிர்க்க நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் தான் ஒரு படத்தை விறுவிறுப்பாக்கும். ஆனால், இங்கு வில்லன் பாதி நேரம் அஜித்தை புகழ்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார். விவேக் ஓபராயை வீணடித்திருக்கிறார்கள். இயக்
விவேகம், சில இடங்களில் வேகம், வேகம்… சில இடங்களில் போதும் போதும் !!
-nakkheeran.in
ரசிகர்களிடமிருந்து பால்திருடுபோகாமல்
பாதுகாப்போம்,பால்முவர்கள் விற்பனைக்கு
வைத்திருக்கும் பால்கேன்களை திருடிக்
கொண்டுபோய் ரசிகரகள்பாலபிஷேகம்
செய்கிறார்கள் ஒருவாரகாலத்துக்கு
கண்விழித்து பால்கேன்களை
திருடுபோகாமல் பாதுகாப்போம் என்று
பால்முகவர்கள் அறிக்கைவிட்டுள்ளார்கள்,
எல்லாம் சரி உங்களின் விமர்சனம் மிக அருமை. ரசிகர்களிடமிருந்து ஆதரவு இருப்பது உண்மைதான் மறுப்பு இல்லை. இவர் ஒரு மிக பெரிய நடிகர் அஜித்குமார் வசூல் சாதனை செய்யும் நடிகர். ஒரு பெரிய பேனர் அமைத்து குடம் குடம் மாகா பாலை ஊற்றி அதை பார்த்து ரசிப்பது எந்த அளவு நன்மை. ஐயா விமர்சனம் எழுது பவரே நீங்கள் விமர்சனம் எழுதும் போது இதையும் சேர்த்து கொண்டால் மிகவும் சிறப்பை இருக்குமே. ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும் என்பது பழைய நடிகர்களை பார்த்து இருக்க வேண்டும். கோடி கோடி சம்பாதிப்பது தன் சொந்த வருமானத்துக்கு. ஏழை மக்களை வைத்து இவங்கள் விளையாடுவது சிறப்பு இல்லை. தனி ஒருவன் புகழுக்காக பேனர் அமைத்து பால் ஊற்றுவது சிறப்பு இல்லை. தெய்வத்துக்கே அபிஷேகம் செய்யும் போது ஏன் இப்படி பாலை உற்ற வேண்டும் என நாம் கேட்கிறோம். அந்த பாலுக்கு செய்யும் செலவை ஏழை மக்களுக்கு கொண்டு போய் கொடுக்கலாமே. நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது போன்ற செயல்கள் தமிழ் நாடில் அதிகமாக நடக்கிறது. இங்கேயும் நடந்தது ரொம்ப மோசமாக இல்லை. திருந்துட தமிழா என்றுதான் தோன்றுகிறது.